வியாழன், 2 செப்டம்பர், 2010

பால்-பழங்களுடன் பார்வதியம்மாவை பார்க்க குவியும் சிங்கள மக்கள்!

வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்வையிட தினமும் 200 வரையான சிங்கள மக்கள் படையெடுப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 நோய்வாய்ப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்றுவரும் பார்வதி அம்மாளைப் பார்வையிட தென்பகுதியிலிருந்து வருகை தரும் சிங்கள் மக்களின் `தொல்லை` அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமும் பால், பழம், பிஸ்கட் போன்ற பொருட்களுடன் இவர்கள் பார்வதி அம்மாளைப் பார்ப்பதற்கு வருகை தருவதாகவும், அவர் நீராகாரம் மட்டுமே தற்போது உட்கொண்டு வருவதால் இவ்வாறு தென்பகுதி மக்களால் வழங்கப்படும் உணவுப் பொருட்களை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மற்றைய நோயாளர்களுக்கு வழங்கும்படி அவர் கூறியுள்ளதாகவும் வைத்தியாசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்வாறு வருகை தருபவர்களில் சிலர் பார்வதி அம்மாளின் கால்களைத் தொட்டு வணங்கிச் செல்வதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வதி அம்மாளின் உடல்நிலை தற்போது எவ்வித முன்னேற்றமுமின்றி உள்ளது. அவருக்கு குளாய் மூலம் நீராகாரம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

0 commentaires:

கருத்துரையிடுக