சனி, 11 செப்டம்பர், 2010

அமெ. இரட்டை கோபுரத் தாக்குதல் நினைவு தினம் இன்று

இன்று அமெரிக்க பெண்டகனின் இரட்டை கோபுரத் தாக்குதல் நடைபெற்ற தினம் நினைவுகூரப்படுகிறது.
 

இத்தாக்குதலின் போது பலி கொள்ளப்பட்ட 40 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் ஆகியோரின் நினைவாக 60 மில்லியன் டொலர் செலவில் இரண்டு மண்டபங்கள், நியூயோர்க் நகரிலும் பெண்டகனிலும் கட்டப்படவுள்ளன. 


பென்சில்வேனியா சமூகத் தலைவர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி, யுனைட்டெட் ஏயார்லைன்ஸ் விமானத்தைக் கடத்தித் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இதன் போது, விமானத்திலிருந்த 40 பயணிகள் கொல்லப்பட்டார்கள். தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடிய விமானப் பணியாளர்களும் பலிகொள்ளப்பட்டனர். 

இந்தச் சம்பவத்தின் நினைவாகவே இவ்விரு மண்டபங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளன. 

இது தொடர்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவும் முன்னாள் முதற் பெண்மணி லாரா புஷ்ஷும் சனிக்கிழமை கலந்து கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பிஸ்பெர்கின் கிழக்கே 80 மைல்கள் தொலைவில் உள்ள, முன்னர் சுரங்கத்தொழில் நடைபெற்ற இடத்தில் 1600 ஏக்கரில் நினைவு மண்டபங்கள் அமையவுள்ளன என்று வர்த்தக சம்மேளன நிறைவேற்றுப் பணிப்பாளர் டொன்அல்டொம் கூறினார். 

உயிரிழந்த 110 பேரின் பெயர்கள் இம்மண்டபத்தில் செதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விருந்தினர் விடுதிகளை மேற்படி மண்டபத்தின் அருகில் அமைக்கவும் விடுதி ஒன்றை நடத்தும் மென்னிபட்டீல் என்பவர் தீர்மானித்துள்ளார். 

Holiday Inn Express எனும் உத்தேச விருந்தினர் விடுதிக் கட்டடப் பணி 2011 இல் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரட்டை மாடி நினைவு மண்டபங்கள் அமைக்கப்பட்ட பின்னர் ஆண்டொன்றுக்கு 2,50,000 பார்வையாளர்கள், அங்கு வருகை தருவர் என எதிர்பார்ப்பதாக அல்டொம் மேலும் தெரிவித்தார். _

0 commentaires:

கருத்துரையிடுக