ஞாயிறு, 28 ஜூலை, 2013

கொழும்பில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் முதலாம்ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்-28-07-2013 ஞாயிறு அன்று கொழும்பில் நடைபெற்றது.அதேநேரம் நியூசிலாந்தில் வசிக்கும் அன்னாரின் கடைசிப் புதல்வன் கதீஸ்வரன் அவர்களும் தமது அன்னையின் நினைவு நாளை தமது இல்லத்தில் பிரார்த்தனை நிகழ்வோடு மிக எழிமையாக நடத்தினார் -

சனி, 27 ஜூலை, 2013

அல்லைப்பிட்டி புனித கார்மேல் ஆன்னை ஆலய-2012 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கையின் முழுவிபரங்கள் இணைப்பு!



அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய நிர்வாகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட-2012 ஆம் ஆண்டிற்கான  கணக்கறிக்கையின் முழுமையான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அல்லையூர் இணையத்தின் சார்பில் கடந்த வருடம்-கார்மேல் அன்னை ஆலயத்துடன் நீண்டகாலத் தொடர்புடையவரும்-பிரான்சில் வசிப்பவருமாகிய-திரு பொன்னத்துரை ஸ்ரனிலோஸ் (ராசு) அவர்களின் தலைமையில் நிதிதிரட்டி ஆலய நிர்வாகத்திடம் வழங்கியிருந்தோம்.இந்த வருடமும் ஆலய பெருநாள் நிகழ்வுகளை-புலம்பெயர் மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான-வீடியோ-நிழற்படங்களுக்குத் தேவையான நிதியினையும்-புலம்பெயர் மக்களில் சிலரிடம் பெற்று நிகழ்வுகளை சிறப்பாக வெளியிட்டோம். 

செவ்வாய், 23 ஜூலை, 2013

அல்லப்பிட்டியைச் சேர்ந்த, சகோதரிகளான-பிரபலாதன் பிரியந்தா-பிரிமியா ஆகியோரின் பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பிரபலாதன் பிரியந்தா-பிரபலாதன் பிரிமியா ஆகிய இருவரும்-தமது பிறந்த நாளை-21-07-2013 அன்று பரிசில் உள்ள தமது இல்லத்தில் கொண்டாடினர்.

இவர்களை,இவர்களது பெற்றோர்கள் உறவினர்களுடன் இணைந்து-எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ ஆண்டவன் துணைபுரிய வேண்டுமென்று அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் வேண்டி வாழ்த்துகின்றோம்.

அல்லைப்பிட்டியில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற-அமரர் திருமதி குழந்தைவேலு கமலாம்பிகை அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை
வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் திருமதி குழந்தைவேலு கமலாம்பிகை அவர்கள் 21-07-2013 ஞாயிறு அன்று அல்லைப்பிட்டியில் காலமானார். 
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்-23-07-2013 செவ்வாய்க்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-அன்னாரது இல்லத்தில் நடைபெற்று அன்று மாலை அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் தகனக்கிரியை நடைபெற்றது.

திங்கள், 22 ஜூலை, 2013

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிறிகாந்தன் ரஜனிகாந்(குமரன்) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-யாழ் ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!



அல்லையூர் இணையத்தின் ஆதரவில்- திரு சிறிகாந்தன் அவர்களின் அனுசரணையில்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிறிகாந்தன் ரஜனிகாந்(குமரன்) அவர்களின் 15வது ஆண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு-யாழ் முத்துத்தம்பி ஆதரவற்றோர் நிழல்கள் இல்லத்தில்-22-07-2013 திங்கள் அன்று பகல் பிரார்த்தனை நிகழ்வுடன் மதிய சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

இலங்கையில்பிரசித்திபெற்ற, அனலைதீவு ஸ்ரீ ஜயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் வீடியோப்பதிவு!


அனலைதீவு ஸ்ரீ ஜயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா-21-07-2013 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.அல்லையூர் இணையத்தின் வீடியோப் பதிவாளரினால் பதிவு செய்யப்பட்ட தேர்த்திருவிழாவினை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

செவ்வாய், 16 ஜூலை, 2013

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின்  வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.
முதல் முறையாக உலகமெல்லாம் பரந்து வாழும் கார்மேல் அன்னையின் பெருநாளை அவரது பக்தர்கள் மதவேறுபாடின்றி கண்டு தரிசிக்க வேண்டும் என்ற நோக்கோடு அல்லையூர் இணையத்தின் பலத்த முயற்சியின் பலனாக இந்த வீடியோப்பதிவு உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது.

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்த பெருநாள் விழா-16-07-2013
செவ்வாய்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.இம்முறை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.ஆயிரக்கணக்கான புனித கார்மேல் அன்னையின் பக்தர்கள் இத்திருப்பலி வழிபாடுகளில் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

ஞாயிறு, 14 ஜூலை, 2013

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 31ம் நாளை முன்னிட்டு-சைவச்சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற-நிகழ்வுகளின் நிழற்படங்கள் இணைப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்-கொண்டிருந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு-அண்மையில் யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள-ஆதரவற்ற மாணவர்கள் தங்கி கல்வி கற்கும்-சைவச்சிறுவர் இல்லத்தில்-நடைபெற்ற  பிரார்த்தனை நிகழ்வுடன்-கூடிய மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவும் வழங்கும் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.





வெள்ளி, 12 ஜூலை, 2013

அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் நடைபெற்று வரும்-ஆனிமாதற்திற்கான அறப்பணிகள் பற்றிய விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் எங்கள் கிராமங்களின் செய்திகளை வெளியிடுவதுடன் தொடர்ந்து தன்னால் முடிந்த அறப்பணிகளையும் செய்து வருவது நீங்கள் அறிந்ததே- அந்த வகையில் ஆனிமாதத்தில் அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் எங்கள் நாட்டில் நாம் செய்த,தொடர்ந்து செய்யப்போகின்ற விபரங்களை உங்கள் முன் பதிவு செய்கின்றோம்.

திங்கள், 8 ஜூலை, 2013

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா அவர்களின் 31ம் நாள் நினைவுதினத்தை முன்னிட்டு-மகாதேவா ஆச்சிரமத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் படத்தொகுப்பு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள- போரினால் தாய் தந்தையினரை இழந்த பிள்ளைகளை வைத்துப்பராமரிக்கும் மகாதேவாஆச்சிரமத்தில்  08-07-2013 திங்கட்கிழமை அன்று -மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் 31ம் நாள் நினைவுதினத்தை முன்னிட்டு-அன்னாரின் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்புடன்-அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்  நேரடியாகச் சென்று -ஆச்சிரமத்தில் நடைபெற்ற அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா அவர்களின் பிரார்த்தனை நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து  சிறப்பு அன்னதான நிகழ்விலும் கலந்து கொண்டார்.இந்த ஆச்சிரமத்தில் சுமார் 350 சிறுவர் சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு  அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் நடைபெற்ற,நான்காவது நிகழ்வாகும்.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்தகொடியேற்றத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருவிழா-07-07-2013 ஞாயிறு அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது என்பதனை மகிழ்வோடு புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா(பாக்கியம்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்-நன்றிநவிலலும் இணைப்பு!


மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-கொழும்பை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் இணைப்பு!

சனி, 6 ஜூலை, 2013

புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களிடம்-அல்லைப்பிட்டியிலிருந்து மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்-அல்லைப்பிட்டியில் பல சிறப்பான  அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.அதன் தொடர்ச்சியாக-தற்போது வேலணை செயலர் பிரிவில் அல்லைப்பிட்டிக்கிராமம் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு கணணி பயிற்சி வகுப்புக்கள் நடத்துவதற்காக- 15 இலட்சம் ரூபா பெறுமதயான உதவிகள் வழங்கப்படவுள்ளன.இக்கணணி வகுப்புக்கள் நடத்துவதற்கான  இடத்தினை-திரு சோமசுந்தரேசன் ராஜன் சேதுபதி அவர்கள் (பராசக்தி வித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள தமது இல்லத்தினை) வழங்கியுள்ளார்.மேலும் இதற்கான முதற்கட்டப்பணிகள் அல்லைப்பிட்டி மாதர் அபிவிருத்திச்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது.அத்தோடு  இவற்றிக்குத் தேவையான மேலதிக சிறிய உதவிகளையே-புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்களிடம் இச்சங்கத்தினர் உரிமையோடு கோரிநிற்கின்றனர்.எமது கிராமத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைவரும் ஒன்றுபட்டு இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை  நாமும் உரிமையோடும் பணிவோடும் உங்களிடம் முன் வைக்கின்றோம்.

வெள்ளி, 5 ஜூலை, 2013

லண்டனில் வியாழக்கிழமை அன்று நடைபெற்ற,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அமரர் நாகலிங்கம் சச்சிதானந்தன் அவர்களின் இறுதிக் கிரியைகளின் நிழற்படத்தொகுப்பு!

லண்டனில் 04-07-2013 வியாழன் அன்று நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் நாகலிங்கம் சச்சிதானந்தன் அவர்களின் இறுதிக் கிரியைகளின் நிழற்படத்தொகுப்பினை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.இறுதி நிகழ்வுகளின் முழுமையான வீடியோப்பதிவினை இன்னும் சில தினங்களில் பதிவு செய்வோம் என்பதனை அறியத் தருகின்றோம்.

வியாழன், 4 ஜூலை, 2013

மண்டைதீவு,அல்லைப்பிட்டி மண்கும்பான் உட்பட-தீவகத்தில் மீள் திறக்கப்பட்ட ஏழு பாடசாலைகள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

இலங்கையில் ஜயாயிரம் பாடசாலைகள் புனரமைக்கும் திட்டத்தில் -ஒதுக்கப்பட்ட நிதியினைக் கொண்டு அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கு புதிதாக வகுப்பறை ஒன்றும்-கழிவறை ஒன்றும்-குடிநீர்த்தாங்கி ஒன்றும் அமைக்கப்பட்டு-அதன் பணிகள் முடிவடைந்த நிலையில்  02-07-2013 செவ்வாய்கிழமை அன்று பாராளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 2 ஜூலை, 2013

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயப் பெருவிழா அறிவித்தலும்-அவசர உதவி கோரலும் இணைப்பு!


அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருவிழா 07-07-2013 ஞாயிறு அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.16-07-2013 செவ்வாய்கிழமை அன்று காலை அன்னையின் பெருநாள் விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை யாழ் மாவட்ட ஆயர் திரு தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களின் தலைமையில்  கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 1 ஜூலை, 2013

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி)அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!



மண்கும்பானைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!

அல்லைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!


அல்லைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா 30-06-2013 ஞாயிறு அன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.யாழ் அமலமரித்தியாதிகள் சபையின் மாகாண முதல்வர் அருட் திரு போல் நட்சத்திரம் அ.ம.தி தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.அதிகளவான மக்கள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.