
யாழ்கொக்குவில்பகுதியில் உள்ள சம்பியன் வீதியில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் பிறந்த சில மணி நேரமேயான ஆண் சிசு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.இன்று காலை 6 மணியளவில் சாக்கினால் சுற்றப்பட்ட நிலையில் இருந்த இச்சிசுவை வீதியில் சென்ற ஆட்டோ சாரதி ஒருவர் அச்சிசுவின் அழுகுரல் கேட்டு சாக்கினை திறந்து பார்த்த போதே சிசுவைக் கண்டுள்ளார்.
உடனடியாக அருகில் உள்ளவர்களுக்கு சிசு தொடர்பாக தகவலளித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது. அவர்கள் மூலமாக சிசு யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Click to open image!
Click to open image!
Click to open image!
Click to open image!
Click to open image!
சிசு தற்போது ஆரோக்கியமாக உள்ளதுடன் அக் குழந்தையின் நிறை 2 Kg க்கும் அதிகமென தெரிவிக்கப்படுகின்றது
0 commentaires:
கருத்துரையிடுக