ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களின் மணிவிழா

கீழே மணிவிழா படங்கள்
இணைக்கப்பட்டுள்ளன!
வீரகேசரி பத்திரிகையில் இருந்து.
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களின் மணிவிழா 24.09.2010 அன்று கலாசாலையில் உள்ள ரதிலட்சுமி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் கலாநிதி நா.சண்முகலிங்கன், பேராசிரியர் ம. இரகுநாதன், கலாநிதி த.கலாமணி, லயன் டாக்டர் வை.தியாகராஜா உள்ளிட்ட பெரியோர்கள் பலர் வாழ்த்துரை வழங்கினர்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடப்பிடமாகக் கொண்ட செ.திருநாவுக்கரசு வாழ்வில் மிக எளிமையான நிலையில் இருந்து உயர்ந்தவர்.










ஆரம்பத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் நடத்துநராகப் பணியை ஆரம்பித்து ஒவ்வொரு படியாக உயர்ந்து ஆசிரியர் சேவையில் இணைந்தார். அங்கும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகப் பதவியுயர்ந்தார்.





2001 ஆம் ஆண்டில் இருந்து கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பதவியேற்றுப் பணியாற்றி வருகின்றார்.

கற்றலில் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டிருக்கும் இவர் கலைமாணி தமிழில் முதுகலைமாணி, கல்வியில் முதுகலைமாணி, தமிழில் கலாநிதி, கல்வி டிப்புளோமா, முகாமைத்துவ டிப்புளோமா முதலிய பல்கலைக்கழகம் சார்ந்த பட்டங்களையும் பண்டிதர், சைவப்புலவர் முதலிய மரபுசார் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கற்றுக்கொடுக்கும் இவர் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வதன் மூலம் சமூகத்தின் சகல மட்டத்தினரதும் செல்வாக்கைப் பெற்றுத் திகழ்கின்றார்.




24/09/2010 வெள்ளிக்கிழமை அன்று யாழ்-கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்-நடைபெற்ற கலாநிதி செல்லையா.திருநாவுக்கரசு அவர்களின் மணிவிழா நிகள்வுகளின் நிழற்படத்தொகுப்பு!





















1 commentaires: