வியாழன், 16 செப்டம்பர், 2010

யாழ் பண்ணை வீதியை மண்டைதீவுச் சந்திவரை செப்பனிட அமைச்சர் பசில் ராஜபக்ச உத்தரவு!

பண்ணை-வீதி
தீவகம் பண்ணை வீதியில் யாழ்.-மண் டைதீவுச் சந்தி வரையான பகுதியை வரும் மழை காலத்திற்கு முன்னர் தார் இட்டு செப் பனிடுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக யாழ். மாவட்ட அவசர மீள்திட்ட நிதியிலிருந்து 15 மில்லியன் ரூபாய் நிதியை வழங்குமாறு யாழ். அரச அதிபரிடம் அவர் தெரிவித்துள்ளார்.


யாழ். மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் நேற்றுக் காலை 10.30 மணி முதல் யாழ். மாவட்ட செயலகத்தில் பொருளாதார அபி விருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளு மன்ற குழுக்களின் பிரதித் தலைவர் மு.சந்திரகுமார், தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம். சுமந்திரன், ஈ. சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண ஆளுனர் மேயர் ஜெனரல் ஜி.ஏ சந் திரசிறி, அத்தியாவசிய சேவைகள் ஆணை யாளர் திவாரட்ன,

யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆ. சிவசுவாமி, வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், யாழ். பல்கலைக்கழக துணைவேந் தர் பேராசிரியர் ந.சண்முகலிங்கன், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, யாழ். மாவட்ட திணைக்களத் தலைவர்கள், உள்ளூர், வெளியூர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநி திகள், யாழ். வணிகர் கழகத்தினரும் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில்யாழ். மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங் களின் தற்போதய நிலை தொடர்பில் அரச அதிபர் விளக்கமளித்தார்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் சில பிரச் சினைகளை முன்வைத்தனர்.இதன்போது யாழ்.தீவகம் பண்ணை வீதி யைப் புனரமைப்புச் செய்வதற்கு 311 மில்லி யன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண் டும் என யாழ்.அரச அதிபர், அமைச்சர் பசில் ராஜபக்ச முன் வைத்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தீவகம் பண்ணை வீதி மிகவும் சேதமடைந்துள்ளது. பண்ணை-மண்டைதீவுச் சந்திவரையான பகுதியை வரும் மழைகாலத்திற்கு முன்னர் தாரிட்டுச் செப்பனிடுமாறு வீதி அபிவிருத்தி சபைக்குப் பணித்தார். இதற்காக 15 மில்லியன் ரூபாய் நிதியை அவசரமாக மீள்திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து வழங்குமாறு அரச அதிபருக்கு அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

புங்குடுதீவில் உரக் களஞ்சியம்அத்துடன் புங்குடுதீவில் உரக்களஞ் சியம் அமைப்பதற்கு 5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை யாழ். மாவட்டத்தில் உயர் பாது காப்பு வலயங்கள் உள்ளிட்ட பல்வேறு கார ணங்களினால் 80 பாடசாலைகள் கைவிடப் பட்டுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக் வி டம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு அவர் பதிலளிக்கையில், இவ்வாறு கைவிடப்பட்ட பாடசாலைகளில் விபரங் கள் சமர்ப்பிக்குமாறும் மக்கள் குடியமர்வும் பிரதேச பாடசாலைகள் மீள ஆரம்பிக்க நட வடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

யாழ்.மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களில் தொடர்ந்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் அதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார். அத்துடன் அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் நன்றியைத் தெரிவித்தார்.

0 commentaires:

கருத்துரையிடுக