வெள்ளி, 10 செப்டம்பர், 2010

கிளிநொச்சியில் கால் பதிக்கும் 'நெஸ்லே'

நெஸ்லே', உலகின் மிகப்பெரிய பால் உணவு தயாரிப்பு நிறுவனமாகும்.

மேற்படி நிறுவனம் புதியதொரு உணவு குளிரூட்டும் மையமொன்றினை (சிலிங் செண்டர்) கிளிநொச்சி பிரதேசத்தில் நிறுவியுள்ளது.



மேற்படி மையமானது கடந்த 8 ஆம் திகதி நிறுவப்பட்டது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதனைத் திறந்து வைத்தார்.

'நெஸ்லே' நிறுவனம் இலங்கையில் சுமார் 100 மேற்பட்ட குளிரூட்டும் மையங்களினை கொண்டுள்ளது.




மேலும் இந் மையதினூடாக பாற்பண்ணையாளர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த 'நெஸ்லே' லங்கா தலைவர் என்டோனியோ எலியோ, இது நெஸ்லே நிறுவனத்தின் 107 ஆவது குளிரூட்டும் மையமெனவும் அப்பகுதியின் பொருளாதார அபிவிருத்திக்கு இது பெரிதும் பங்களிப்பு செய்யுமெனவும் தெரிவித்தார்.

எனினும் இதனை நிறுவுவதற்காகத் தாம் முதலிட்ட தொகை தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

மேலும் இவ்வருடத்தில் தாம் மேலும் 8 குளிரூட்டும் மையங்களைத் திறக்க உத்தேசித்துள்ளதாக அது தெரிவிக்கின்றது.

0 commentaires:

கருத்துரையிடுக