செவ்வாய், 7 செப்டம்பர், 2010

ஜெர்மனியில் கொலை குற்றச்சாட்டில் தமிழ் யுவதி? மனநோயால் பாதிக்கப்பட்டவரா?


இலங்கையரான இளம்யுவதி ( வயது 24) ஒருவருக்கு எதிராக ஜேர்மனியில் படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்று இடம்பெற்று வருகின்றது.

 இவர் Bern நகரில் உள்ள Flora Park இல் வைத்து 52 வயதுடைய ஆண் ஒருவரை கத்தியால் குத்தி 2008 ஆம் ஆண்டு படுகொலை செய்திருக்கின்றார். படுகொலை செய்யப்பட்டவரும் இலங்கையர் ஆவார்.


இவர் இந்த இந்நபரை வீதியில் சந்தித்துக் கூடவே பூங்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். பின் அந்நபருடன் பாலியல் தொடர்பு கொண்ட பின் கத்தியால் குத்திப் படுகொலை செய்திருக்கின்றார். குத்து வாங்கியவரின் குழறல் சத்தத்தைக் கேட்டு பொதுமக்களும், பொலிஸாரும் அந்த இடத்தில் குவிந்து விட்டனர்.

திட்டமிட்டு படுகொலை செய்தார் என்று இளம்யுவதி குற்றவாளியாகக் காணப்படலாம். ஆனால் இவர் ஒரு நீண்ட கால மன நோயாளி என்று குடும்பத்தினரும், இவரின் மருத்துவரும் கூறுகின்றார்கள்.

இவர் மனநோய் காரணமாக வன்முறை எண்ணங்களால் தூண்டப்படுகின்றமை உண்டு என்றும் முன்பு 16 வயது சொந்த சகோதரன் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றிருக்கின்றார் என்றும் குடும்பத்தினர் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட மன நோயாளியை வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்க்காமல் சமூகத்துடன் கலந்து வாழ குடும்பத்தினர் அனுமதித்து வருகின்றமை குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன.

0 commentaires:

கருத்துரையிடுக