புதன், 6 அக்டோபர், 2010

அல்லைப்பிட்டியில் தகவல் மையம்

அல்லைப்பிட்டியில் தகவல் மையம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்டவேலைகளில்அல்லையூர்இணையம் ஈடுபட்டுள்ளது.                       முதற் கட்டமாக வெளிநாடுகளில் வாழும் எம்மூர் மக்களுடனான தொடர்புகளை இலகுப்படுத்தும்நோக்கோடு அமையவிருக்கும் இத்தகவல் மையத்திற்கான இடம் அல்லைப்பிட்டியின் மத்தியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து படித்த இளைஞர்களுக்கு பகுதிநேரவேலை வாய்ப்பினை வழங்குவதோடு,இணையவசதி தொலைபேசி வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதே! இதன்நோக்கமாகும்.
01/01/2011 அன்று இந்த தகவல் மையம் செயற்படத் தொடங்கும் என்பதனை
மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.இத்தகவல் மையத்தினால்
அல்லைப்பிட்டி-மண்கும்பான்-மண்டைதீவு -மக்கள் பெரிதும் பயனடைவர்
என நம்புகின்றோம்.
குறிப்பு*******.உங்கள் கருத்துக்களையும்-ஆலோசனைகளையும் எதிர் பார்க்கின்றோம்.

2 commentaires:

  1. அல்லைப்பிட்டி மக்களின் வாழ்வை எப்படி முன்னேற்றம்செய்யலாம் என்ற கேள்வி என் மனதை உறுத்தியபோது, நான் இலங்கைத்தீவில் அல்லைப்பிட்டியின் அமைவிடம், அதனது சுற்றுப்புறச்சூழல்கள் மற்றும் அதனது இயற்கைவளங்கள் பற்றி ஆராய்ந்தேன். அந்த ஆராய்வின் பலனாக, அல்லையூர்மக்கள் எல்லோரும் பயனடையக்கூடிய வகையில் எனக்குள் சில திட்டங்கள் உருவாகின. இந்த திட்டத்தின் ஒருசில மூல உபாயங்களின் ஒருபகுதியை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

    மேலும் இத்திட்டமானது ஒரு கூட்டுறவுச்செயற்பாட்டின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படவும், அதனூடாக இந்ததிட்டத்தின் பங்குதாரர்கள் பயன்பெறவும் முடியும். இத்திட்டமானது சாதி, சமய, மற்றும் தொழில்ரீதியிலான எம்மவர்களுக்கிடையேயான வேறுபாடுகளை களைவதுடன், மனிதவாழ்வில் சகமனிதர்களுக்கிடையிலுள்ள புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும்!

    திட்டம் இதுதான்:
    அல்லைப்பிட்டியைச் சூழவுள்ள எதற்கும் பயன்படாமலுள்ள கன்னாக்காட்டுப் பரவைக்கடலை, எமதூர்மக்களின் கூட்டுறவு ஒப்பந்தின் மூலம் இயற்கையாக "இறால்", "நண்டுகள்" மற்றும் சிலவகை "மீன்களை" உற்பத்திசெய்யும் பண்ணைகளாக உருவாக்குவது!

    எனது இந்த யோசனையை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் தங்களுடைய கருத்துக்களை பகிரங்கமாக முன்வைக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

    இவ்வண்ணம்
    செல்லத்துரை கலாமோகன்
    சுவிற்சர்லாந்து
    தொலைபேசி இல.: +41 31 869 24 43

    பதிலளிநீக்கு
  2. உழைத்து முன்னேற விருப்பமுடையவர்கள் தயவுசெய்து இந்த ஆவணப்படத்தை பார்க்கவும்!

    http://www.youtube.com/watch?v=-0fdP0_pAnk&feature=related

    http://www.youtube.com/watch?v=FZWxOQTMiwg&feature=channel

    பதிலளிநீக்கு