செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வேலணை சாட்டிக் கடலில் பெண்களுடன் சேட்டைவிட்ட--------

தென்பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுடன் வேலணை சாட்டிக் கடற்கரையில் சேட்டை விட்ட ஏழு இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கூடும் முக்கிய சுற்றுலாத்தளமான சாட்டி கடற்கரைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தவர்களுடன் பெண்கள் குளித்துக் கொண்டிருந்த போது நீருக்கடியில்  நீந்திச் சென்று சேட்டை புரிந்தனர் இளம் வாலிபர்கள்.  இவர்களின் அட்டகாசம் பொறுக்க முடியாது குளிப்பதையும் கைவிட்டு வெளியே வந்த  சில குடும்பத்தவர்கள் சம்பவம் பற்றி அங்கு கடமையில் நின்றிருந்த காவல்துறையினருக்கு அறிவித்தனர். அதற்கிடையில் அவ்விளைஞர்கள் தென்பகுதியில் இருந்து வந்திருந்த சிங்கள யுவதிகளுக்கும் தங்களது வித்தைகளை காட்டவே இவர்களின் அட்டகாசம்  மிறிவிட்டதை உணர்ந்த பொலிசார் கடலுக்குளேயே ஏனைய பொதுமக்களுடன் சேர்ந்து துரத்தி துரத்தி இவர்களில் மூவரை கைது செய்தனர். பின்னர் அவர்களுடன் வந்த ஏனைய நால்வரையும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவர்களில் மூவர் 17 வயதான மாணவர்கள் என்பதை கருத்தில் கொண்ட நீதிபதி மிகவும் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தார். ஏனைய நால்வரையும் தண்டப் பணம் கட்டி பிணையில் விடுவிக்கும் படி உத்தரவு இடப்பட்டுள்ளது. சாட்டி கடற்கரை மற்றும் கசூரினா கடற்கரை போன்ற சுற்றுலாத் தளங்களில் நடைபெறும் இவ்வாறான சேட்டைகளை  கட்டுப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

0 commentaires:

கருத்துரையிடுக