ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

யாழில் இந்துக்கோவில்களில் வைத்து மாமிசம் உண்ணும் தென்னிலங்கை மக்கள்

யாழ்ப்பாணத்தின் உள்ள இந்து ஆலயங்களில் 
வைத்து தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் 
மாமிசம் உண்கின்றனர்-யாழ் 
ஏடு வலம்புரியின் கண்ணீர்க்கரிசனை!


யாழ்ப்பாணத்தை நோக்கி தென் பகுதியிலிருந்து வருகை தருகின்ற மக்கள் எதைத்தான் பார்க்கின்றார்கள்?இங்கு என்னதான் இருக்கிறது அவர்கள் பார்ப்பதற்கு? என்ற கேள்வி எம்மில் பலரிடம் ஏற்படுகின்றது.
இந்தக் கேள்விதான் எங்கள் பெருமைகளையும் வரலாற்றுச் சின்னங்களையும் சிதைப்பதற்கு மூல காரணம் என்பது உணரப்பட வேண்டும்.எங்கள் மூதாதையர் பயன்படுத்திய வெற்றிலைத்தட்டம் கூட எங்கள் வாழ்வியல் பண்பாட்டின் அடையாளம் என்பது தெரியாமல் இருப்பதனால்தான்,ஒரு கிலோ செப்பு நாற்பது ரூபாய், பித்தளை முப்பது ரூபாய் என்று தராசில் நிறுத்து விற்றுத் தீர்க்கின்றோம்.

மிகப் பெறுமதியான பழைய காலத்துக் குத்துவிளக்குகள் தூக்குத் தராசில் தொங்கிக் கொள்ள, சில்லறைக் காசுக்கு அவை விற்பனையாகும் வேதனையையாரிடம் சொல்வது? குத்துவிளக்கென்றால்,விளக்கேற்ற வேண்டும் இல்லையயன்றால் அதனை வைத்திருந்து என்ன பயன் என்று நினைக்கும் எங்களிடம் கலைத்துவ பஞ்சமும் நிறையவே உண்டென்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

வீட்டின் முன் பாகத்தில் துலக்கிய குத்து விளக்கை,கெண்டியை,வெற்றிலைத் தட்டத்தை வைப்பது கூட அழகுதான்.தூண்டாமணி விளக்கை தூக்கி விடுவதில் கூட தெய்வீகத் தன்மை வெளிப்படுவதை உணர முடியும்.இதைச் செய்கின்றபோதுதான் எங்கள் ஒவ்வொரு வீடுகளிலும் தமிழர்களின் வாழ்வியல் சிறப்பும் எங்கள் முன்னோர்களின் வாழ்வியல் அடையாளங்களும் பாதுகாக்கப்படும்.

அதேநேரம் எங்களிடம் இருக்கின்ற பொக்கிங்களை,வரலாற்றுப் பதிவுகளை பார்வையிடுவதில் நாமும் ஆர்வம் காட்டுவது கட்டாயமா னதாகும்.இதிலிருந்து நாம் விலகிக்கொள்ளும் போது அதற்கான உரிமைகோரல்களும் திரிபு படுத்தப்பட்ட வரலாற்றுப் படைப்புகளும் புதிதாக தோற்றுவதை தடுக்க முடியாமல் போகும். இது விடயங்களில் நாம் கரிசனை கொள்ளும் அதேநேரம் தென்பகுதியில் இருந்து வரு கின்ற மக்கள் இந்துக் கோயில்களில் வைத்து மாமிச உணவைப் புசிப்பதைப் பார்க்கும்போது வேதனை நெஞ்சை உடைக்கின்றது.

இவையயல்லாம் அறியாமல் செய்யப்படுபவையா அல்லது இது பெளத்த சிங்கள நாடு, இங்கு நாங்கள் நினைத்தால் எதுவும் செய்ய லாம் என்ற நினைப்பா என்பது தெரியாமல் உள்ளது. எதுவாயினும் தென்பகுதி மக்கள் தரையிலும் வெளியிலும் உணவு பரிமாறுவதைப் பார்க்கும் போது இந்த இயற்கையின் வனப்பை அவர்கள் அற்புதமாக அனுபவிக்கிறார்கள் என்ற மனநிலை ஒருபுறம்.இவர்கள் உணவு பரிமாறுவதற்கு ஏற்றதாக பொது இடம் இல்லையே என்ற மனக்கவலை மறுபுறமாக இருக்கும் போது,

இந்து ஆலய வெளி மண்டபங்களில்-மண்ட பங்களில்-வெளிவீதிச் சுவர் ஓரங்களில் வைத்து மாமிச உணவைப் புசிப்பது தெய்வீகத்திற்கு இழுக்கான செயலாகும்.இத்தகைய செயல்களைக் கண்டு ஒவ்வொரு இந்துவும் கண்ணீர் வடித்தாலும் யாரிடம் சொல் வது,சொன்னால் நீதி கிடைக்கவா போகின்றது,எல்லாம் நடந்து முடியட்டும் என்னும் மனநிலையில் அவர்கள் மெளனம் சாதிக்கின் றனர்.இந்த துன்ப நிலையை பொறுப்பானவர்கள் உணர்ந்து செயற்படுவது மிகவும் அவசியமான தாகும்.

0 commentaires:

கருத்துரையிடுக