சனி, 31 ஜூலை, 2010

பிரான்ஸ் பாரிஸ் நகரில் திடீர் என ஆற்றுக்குள் பாய்ந்தது பேரூந்து! ரசித்து பார்த்த உல்லாசப்பிரயாணிகள்!




பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் "செயனே"ஆற்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்தின் பிரேக் திடீர் என செயல் இழந்தமையால் அப் பேருந்து உருண்டு சென்று "செயனே" ஆற்றுக்குள்ளே விழுந்தது. இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (29 ம் திகதி) நடை பெற்றதாகும். ஆற்றின் வேகம் காரணமாக பேருந்து மிக வேகமாக இழுத்து செல்லப்பட்டு சில நிமிடங்களிலேயே ஆற்றில் முற்று முழுதாக மூழ்கியது. உடனே அங்குவந்த தீயணைப்பு படையினராலும் எதுவும் செய்ய முடியவில்லை.அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இச் சம்பவத்தை நேரில் கண்டனர்.


வெள்ளி, 30 ஜூலை, 2010

புலம்பெயர்ந்து வாழும் நம்மூர் இளைஞனின் உள்ளத்திலிருந்து.............

வணக்கம் !! இத்தாலியில் இருந்து ஆனந் எழுதுகின்றேன் , அல்லையூர் தளத்தை பார்த்தேன் மிக்க மகிழ்சி ,ரொம்பவும் நல்ல தரமானதாக நிரல்கள் அமைந்துள்ளது .வாழ்த்துக்கள்!!
பரிமளகாந்தன் செய்தி கேட்டு மிகவும் சந்தோசப்பட்டேன் ,நாம் இருவரும் ஒரே திசையில் ஆடிய
பட்டங்கள் காலத்தை எதிர்த்து போராடியவர்கள், வைராக்கியத்துடன் எதிர்காலத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்கள் .அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கும் என் நண்பனை பற்றி அறிந்தபோது சந்தோசம் தாங்கமுடியவில்லை .ஒவ்வொரு  மனிதனும் வாழ்வில் வெற்றி அடைந்த மனிதர்களை பின்பற்றி வாழப்பழகிக்கொள்ளவேண்டும் . அப்படிப் பின்பற்றும் போதுதான்
எமக்கு நல்வழி பிறக்கின்றது . பலவருடங்களாக தொடர்பு இல்லாமல் இருந்தேன் ,நல்ல செய்தி காதில் ஒலிக்கும்போது அதுவே போதும் என்றாகி விட்டது .பராசக்தி வித்தியசலையில் இருந்து
வேலணை மத்தியமஹா வித்தியாசாலை வரை ஒன்றாக படித்தோம் ,அதன் பின்னர் நான் பல்கலைக்கழகம் சென்று இறுதியில் இத்தாலியில் தங்கியுள்ளேன். ஒரு தொழில் நிறுவனத்தின்
உரிமையாளராக ஏழு நண்பர்களுடன் தொழில் செய்கின்றேன் .அண்மையில்  ஜெனோவா மாநகரின் நடைபெற்ற தேர்தலில் தமிழ் பிரநிதியாக மக்களால் தேர்தெடுக்கப்பட்டு எம் மக்களுக்காகவும் ஜெனோவா வாழ் தமிழ் மக்களின் நலனுக்காகவும் என்னால் முடிந்த அளவு சேவை செய்கின்றேன் , அல்லையூர் மக்களுக்காகவும் நமது ஊருக்காகவும் எடுக்கும் எந்த நலன்களிலும் என்னையும் பங்குபெற சந்தர்பம் அளிக்குமாறு
தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன் ,முக்கியமாக எமது பாடசாலை நான் ஏற்கனவே ஊருக்காக சில பொது பணிகளிலே தனியாக நின்று செயல்படிருக்கின்றேன் இருப்பினும் நாம் ஒன்றாக நின்று ஒரு பணியை செய்யும் பொது அது மிகவும் சிறப்பானதும் திடகாத்திரமானதாகவும்  அமையும்  என்பது எனது கருத்து .ஆகவே ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு என்ற வரைவிலக்கணப்படி ஒன்றாக சேர்ந்து நாம் நல்லபணிகளை செய்ய இத்தாலி சார்பில் நான் எதையும் நம் ஊருக்காக செய்ய ஆவலாகவுள்ளேன் .என்பதை ஒரு நண்பனாக கூற
விரும்புகின்றேன்  ,          நன்றி .                                         அல்லையூர் அருள் ஆனந்த்
                                                                                                                                              ஜெனோவா  இத்தாலி

வியாழன், 29 ஜூலை, 2010

செல்வச் சந்நிதி ஆலயப் பெருந்திருவிழா 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்




செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த திருவிழா 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்!யாழ்ப்பாணம், ஜூலை 29
தொண்டைமானாறு செல் வச்சந்நிதி ஆலயத்தின் வரு டாந்தப் பெருந் திருவிழா எதிர் வரும் 10ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமா கவுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு பூங்காவனத் திரு விழாவும், 19ஆம் திகதி வியாழக் கிழமை காலை 8 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும், 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சப்பரத் திருவிழாவும், 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்குத் தேர்த்திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க் கிழமை முற்பகல் 10 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.
திருவிழாக் காலங்களில் தினமும் காலைத் திருவிழா காலை 8 மணிக்கும், இரவுத் திருவிழா மாலை 4 மணிக்கும் நடைபெறும். 

திங்கள், 26 ஜூலை, 2010

மண்டைதீவு புனிதபேதுருவானவர் ஆலய திருச்சுரூபபவனியின் நிகழ்ப்படத்தொகுப்பு!



மண்டைதீவு புனிதபேதுருவானவர் ஆலய திருச்சுருபப்பவனியின் நிழல்ப்படத்தொகுப்பு!
,இடது பக்கத்தில் உள்ள சதுரத்தில் அழுத்திப்பார்வையிடவும்
மண்டைதீவில் உள்ள இந்து ஆலயங்களும் பதியப்பட்டுள்ளன!.

சனி, 24 ஜூலை, 2010

அல்லைப்பிட்டி குடியேற்றத்திட்டம்!!!

அல்லைப்பிட்டியில் புதிதாக உருவாக்கப்படும் குடியேற்றத்திட்டம்.
அல்லைப்பிட்டி அந்தோனியார் கோவிலை மையமாக வைத்து ஆயிரம்
வீட்டுகுடியேற்றத்திட்டம் கத்தோலிக்க திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நுாற்றுக்கணக்கான வீடுகள் கட்டி
முடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து வீடுகள் கட்டும் வேலை 
மிகவேகமாகநடைபெற்றுவருகிறது.
இப்பகுதியில் குருநகர் பாசையூர் மற்றும் நாவாந்துறையை சேர்ந்த கடல் 
தொழிலாளர்களே குடியமர்த்தப்படவுள்ளனர் 
உள்ளே புதிய நிழல்ப்படங்கள்
பதியப்பட்டுள்ளன!!!

அல்லைப்பிட்டி அந்தோனியார் ஆலயம்!!!

வெள்ளி, 23 ஜூலை, 2010

அல்லைப்பிட்டி புனித உத்தரிய மாதா திருச்சுருப பவனியின் 16/07/2010 வெள்ளியன்று இடம்பெற்ற நிகழ்வுகளின் நிழல்ப்படத்தொகுப்பு!!!

மிகுதி நிழல்ப்படங்கள் உள்ளே பதியப்பட்டுள்ளன!!!
நிழல்ப்படப்பிடிப்பு****p-t மாறன்






செவ்வாய், 20 ஜூலை, 2010

அல்லைப்பிட்டியில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு!!!


அல்லைப்பிட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகள் பொது இடங்கள் அனைத்தையும் துப்பரவு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வேலணை உதவி அரசாங்க பணிமனை ஊடான நிவாரண கொடுப்பனவுகளுக்காக அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் திரு சின்னதுரை
இரத்தினேஸ்வரன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் சிரமதான பணிகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானபணிகளில் மக்கள் ஆர்வமுடன் கலந்து
கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.300க்கும் அதிகமான குடும்பத்தைச்சேர்ந்த தலா ஒருவர்வீதம் இந்த சிரமதானபணிகளில் கலந்து
கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஊதியமாக உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

                                  

திங்கள், 19 ஜூலை, 2010

துயர் பகிர்வோம்

அல்லையூர் இணையத்தின் வளர்ச்சியில் பெரிதும் பங்கெடுத்து வரும்
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த திரு வரப்பிரகாசம் பரிமளகாந்தன் அவர்களின்
அன்பு மாமியார் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன்
அல்லையூர் இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.
           மரண அறிவித்தல்

வெள்ளி, 16 ஜூலை, 2010

அமரர் திரு செல்லத்துரை சுதாகரன்(சுதா) மண்கும்பான் அவர்களின் 12/07/2010
திங்கள்கிழமை அன்று பாரீஸில் நடைபெற்ற இறுதி நிகழ்வுகளின் நிழல்ப்படத்தொகுப்பு 


மிகுதி நிழல்ப்படங்கள் உள்ளே பதியப்பட்டுள்ளன!!!


























ல்லைபிட்டி 2ம் ட்டாரத்தில் எழுந்தருளி இருக்கும் அன்னை கார்மேல் உத்தரிய மாதாவின்
திருவிழா ந்த யூலை மாதம் 7ம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகி 16ம் திகதி ங்குத் தந்தை
பிலிப் கிதம் அருட் ந்தை அல்பிறட் அலெக்ஸ்சாண்டர்
லைமையில் இத்திருவிழா வெகு சிறப்பாக
த்தப்பட்டது.அத்துடன் வேறு பல அருட்தந்தைகளும்
பொதுமக்களும் ந்திருந்து விழாவை சிறப்பித்தர்.
அத்துடன் allaiyoor.blogspot.com விடுத்திருந்த வேண்டுகோளை
ஏற்று புலம்பெயர் அல்லையூர் மக்களும் சிற்றுண்டிகளை வழங்கி
இருந்தனர்.அத்தோடு கனடாவில் வசிக்கும் அல்லைப்பிட்டி நண்பர்
ஒருவரும் இணையம் மூலம் நிகழ்வுகளை எடுத்து வருவதற்கும்
உதவி புரிந்திருந்தார்.இவர்களுக்கு எமது நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
                        

புதன், 14 ஜூலை, 2010

வறுமையோடு போராடி வாழ்க்கையில் ஜெயித்த நம்மூர் இளைஞனின் கதை!!!

                                                    இது கதையல்ல நிஜம்
                                                   *************************
இவர் அல்லைப்பிட்டிமண்ணுக்கு பெருமைசேர்த்தவர்களின் வரிசையில்
அடங்குவதால் இவரைப்பற்றிய தகவல்களை
உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
இவர் அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தில் 23/05/1959,இல்பிறந்த திரு சிவப்பிரகாசம்
பரிமளகாந்தன் அவர்கள் ஆவார் இவர் எங்கள்
மண்ணின் மைந்தர்களில் ஒரு செல்வ செழிப்பில்லாத குடும்பத்தில் பிறந்தாலும் வாழ்க்கையில் வறுமையோடு போராடி வாழ்வின் உயர்ந்தநிலைக்கு வந்தவர் ஆவார்.


இவர் தன் ஆரம்பக்கல்வியை அல்லை/பராசக்தி
வித்தியாலயத்திலும் உயர்கல்வியை வேலணை சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி
மத்திய மகா வித்தியாலயத்திலும் அதன்பின்
தன்கல்வியை மட்டுமே மூலதனமாக வைத்து
தொழில் தேடத்தொடங்கினார். ஆரம்பகட்டமாக சீமேந்து ஆலையில் இயங்கிய
ஊரணி புனித அந்தோனியார் தொழிற்சம்மேளனத்தில் பொருள்காப்பாளராக
(store keeper)சில ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பிற்பட்டகாலப்பகுதியில்
(எண்பதுகளில்)அல்லைப்பிட்டிக் கிராமத்தில் உருவாகிய(விமல் அலுமினியம்
தொழிற்சாலையில்)சில ஆண்டுகள் பணியாற்றினார்.நாட்டில் தோன்றிய
அசாதாரணசூழ்நிலைகாரணமாக தொழிற்சாலை மூடப்பட இவரோடுசேர்ந்து
பல அல்லை இளைஞர்களும் வேலையிழக்க நேரிட்டது.
அதன்பின் தன்கடும்முயற்சியால் யாழ்/புனித சம்பத்திரிசியார்(st patrik's college)கல்லூரியில் கணக்காளராக(Account clerk)பணியில் சேர்ந்து சில ஆண்டுகள்
பணியாற்றினார்.
அரசாங்கப்பணியில் இவருக்கு இருந்ந ஆர்வம் இவரை அஞ்சல்துறையில்
பணிபுரியவைத்தது. இருப்பினும் அஞ்சல் திணைக்களத்தில் ஒரு சாதாரண
அஞ்சல் ஊழியராகவே(post man)தனது பணியை ஆரம்பித்த இவர் பின்னா்
படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்று இன்று ஒரு அஞ்சல்தரப்பிரிவு உத்தியோகத்தராக(m-s-o)கடமையாற்றுகின்றார்.
அது மாத்திரமன்றி ஒரு கலைஞனாகவும் இவர்
எமது மக்களால் அறியப்பட்டவர்.
1970களில் அல்லைப்பிட்டியில் பிரபலமாயிருந்த வேல் இசைக்குழுவின்
பிரதானபாடகராகவும்-அல்லையூர் சித்திரகலா
நாடகமன்றத்தில் ஒருபிரதான நடிகராகவும்
தனது கலைப்பங்களிப்பை திறமையோடு
ஆற்றியிருந்தார்.
வாழ்வில் தோல்விகளை கண்டு துவழாதமனமும் விடாமுயற்சியும் இருந்தால்
உறுதியாக வெற்றிபெறலாம் என்பதற்கு இவர்
ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றார்.
எமது அன்புக்கும் பெருமைக்கும் உரியஇவர்
கடந்த ஆண்டில் தனது 50ஆவது அகவையை
கொண்டாடினார்.
மிகவிரைவில் தனது அஞ்சல் பணியின் வெள்ளிவிழாவை கொண்டாட இருக்கும் இவரை அல்லைப்பிட்டி மக்கள் சார்பாகவும் எமது இணையத்தளம்
சார்பாகவும் இவரை நாம் உளமார வாழ்த்துகின்றோம்.

எங்கள் கிராமத்து கற்பகதரு பனை


பண்டையகால தமிழர்களுடைய வாழ்வியல் முறை இயற்கையோடு ஒன்றாகப் பின்னிப்பிணைந்த ஒன்றாகவே இருந்துள்ளது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இயற்கை அன்னையின் கொடைகளில் ஒன்றான பனை வளம் யாழ் குடாநாட்டு மக்களின் நடைமுறை வாழ்வோடு இறுகப்பின்னிப் பிணைந்திருந்த முறைபற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறியவில்லை என்பது கவலையான ஒரு விடயமாகும்.
யாழ் குடாநாட்டு பழங்குடி மக்கள் பனை ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளிலேயே வாழ்ந்தார்கள். அது தவிர புதிதாக வீடு கட்டுவதற்கும் பனை மரங்களில் இருந்து பெறப்பட்ட மரக்குற்றிகள், சிலாகைகள், வளைவுகள் என்பவற்றை அவர்கள் பயன்படுத்தினார்கள். பனை மரம் மூலம் பெறப்பட்ட பொருட்களின் இருந்து கட்டப்பட்ட வீடுகள் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் மழைகாலத்தில் இதமான வெப்பத்தையும் கொடுத்தது. இதனால் வருடம் முழுவதும் சிறந்த சுவாத்தியத்துடன் அவர்கள் ஆரோக்கியமாகவும் மனநிறைவோடும் வாழ்ந்தார்கள்.
அவர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த பனை மரங்கள் குடாநாடு எங்கும் பனத்தோப்புகளாகக் காட்சியளித்தது. பனங்குருத்தோலைகள் கொண்டு அக்காலத்தில் பல விதமான பாய்கள் இழைக்கப்பட்டன. இப்பாய்களிலே அவர்கள் படுத்து உறங்கினார்கள். சாயம் பூசப்பட்ட வர்ண வேலைப்பாடுகள் கொண்ட பாய்களைக் கொண்டு விருந்தினர்களுக்கு ஆசனம் அமைத்துக் கொடுத்தார்கள். வீட்டிற்கு யாராவது விருந்தினர்கள் வந்தால் முதலில் மூலையில் சுருட்டி வைத்திருக்கும் பாய்களை உதறி விரித்துப்போடும் பழக்கம் அவர்களிடம் இருந்தது. அக்காலத்தில் பனை ஓலையின் பயன்பாட்டிற்கு எல்லையே இல்லை எனக்கூறலாம்
வீடுகளில் அன்றாடம் பாவிக்கும் பொருட்களுக்கும் பனைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. சமையலறைகளில் பயன்படுத்தப்பட்ட சுளகு, பெட்டி, கடகம் , திருகணை, உறி போன்றவையும் பனம் பொருட்களாகவே இருந்தன. மேலும் கதிர்ப்பாய்கள் என்று அழைக்கப்படும் பாய்களுக்கு காரணப்பெயராகவே இப்பெயர் அமைந்திருந்தது. கமக்காரர்கள் தங்கள் உழைப்பின் மூலம் பெறப்பட்ட நெல், தினை, குரக்கன், வரகு, உழுந்து, பயறு, சணல், புழுக்கொடியல், ஓடியல், மிளகாய், போன்றவற்றை வெளியில் காயப்போடுவதற்காக பெரிய பாய்களைப் பயன்படுத்தினார்கள். இதனால் இப்பெரிய பாய்களை கதிர்ப்பாய்கள் என்று அழைத்தார்கள்.

19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பனை ஓலை கொண்டு பின்னப்பட்ட மிகப்பெரிய பாரிய கூடைகளிலேயே கமக்காரர்கள் நெல்லை சேமித்து வைத்தார்கள். வீட்டின் சாமியறைகளில் வைக்கப்படும் கோர்க்காலிகளில் நான்கு, ஐந்து கூடைகளில் பல தரப்பட்ட பொருட்களை அவர்கள் களஞ்சியப்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இக்கூடைகள் சாதாரணமாக ஏழு, எட்டு அடி உயரத்தையும் ஐந்து, ஆறு அடி விட்டத்தையும் கொண்டவையாக அமைந்திருந்தன.
கூறைச்சீலைகள், பட்டுவேட்டிகள் போன்ற முக்கிய பெறுமதி மிக்க ஆடைகள் திறந்து மூடக்கூடிய நீள் சதுர பெட்டிகளில் வைத்து அப்பெட்டிகளை பெட்டகங்களுக்குள் வைத்துப் பாதுகாத்தார்கள்
கிணறுகளில் இழுத்து நீரை அள்ளுவதற்கு துலாக்களே அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. அதுமாத்திரமல்லாமல் நீரை மொண்டு அள்ளுவதற்கும் பனை ஓலை பட்டைகளைப் பயன்படுத்தினார்கள். வயல் பிரதேசங்களில் அமைந்திருந்த துரவுகள் மூலம் கைப்பட்டைகள் கொண்டு சிறுபயிற்ச்செடிகளுக்கு நீர் வார்த்தார்கள்.
யாழ் குடாநாட்டு மக்களின் வணக்க வழிபாட்டு இடங்களான கோவில்களிலும் பனை ஓலைகளைப் பயன்படுத்தினார்கள். விபூதி வைப்பதற்கும் பூக்கள் கொய்வதற்கும் பனை ஓலைக்குடுவைகளையும் பயன்படுத்தினார்கள்.
ஆயுள் வேத வைத்தியர்கள் வாடகங்களை எழுதுவதற்கும், சோதிடர்கள் சாதகங்களை எழுதுவதற்கும் ஓலைச் சுவடிகள் கையாளப்பட்டன. பண்டைய காலத்தில் நூல்களை யாத்தவர்களும் ஓலைச்சுவடிகளைப் பாவித்தார்கள்.
பனையில் இருந்து பெறப்படும் பனங் கள்ளை பிளாவில் குடிப்பதை இன்பமாகக் கருதினார்கள் அக்கால பெருங்குடிமக்கள். அவர்களின் விறகுத் தேவைகளையும் பனை, ஓலைகள், மட்டைகள், பன்னாடைகள்ம் கொக்காரைகள், ஊமல்கள் கொண்டு நிறைவேற்றினார்கள்.
பனங்கட்டிகளுக்கான குட்டான்களை பனை ஓலைகொண்டு உருவாக்கினார்கள். காசு, வெற்றிலை, பாக்கு என்பவற்றை வைப்பதற்கு அக்காலப் பெண்கள் கொட்டைப்பெட்டிகளை உபயோகப்படுத்தினார்கள். இக்கொட்டைப் பெட்டிகள் சாயம் பூசப்பட்டு அழகுடன் மிளிர்ந்தன. காட்டுக்கரைகளில் ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் பனை ஓலைத் தொப்பிகளை கட்டாயம் அணிபவர்களாக விளங்கினார்கள்.

யாழ் குடாநாட்டு மக்களிடையே ஆட்டு இறைச்சி பங்கு போடல் முக்கியமான ஒன்றாகும். இவ்ஆட்டு இறைச்சிகளை பச்சை பனை ஓலைகளில் பொதி செய்து பங்கு பிரிப்பவர்களுக்கு அனுப்பும் பழக்கம் இன்றும் காணப்படுகின்றது. இதனால் இறைச்சி பழுதடையாமல் பல மணி நேரத்திற்கு பாதுகாக்கப்படும் தன்மை உண்டு. பனை தறிக்கப்படும் போது கிடைக்கும் பனங்குருத்து மிகவும் சுவை கொண்டதுடன் அபூர்வ ஆயுள்வேத மூலிகையாக் கருதப்படுகிறது.
அக்காலத்தவர்கள் பட்டியாக வளர்க்கப்படும் மாடுகளுக்கு பனை ஓலைகளை உணவாக வழங்கினார்கள். துலாக் கயிறுகளையும் ஆடு, மாடுகளை கட்டுவதற்கான கயிறுகளையும் வடங்களையும் பனை நார் கொண்டு தயாரித்தார்கள்.
அக்கால மக்களின் இனிப்புத் தேவையை பதநீர் மூலம் பெறப்படும் பனங்கட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு ஆகியவை பூர்த்தி செய்தன. அத்துடன் பனாட்டை காலையிலும் ஒடியற்கூழை பகலிலும் ஒடியற்பிட்டை இரவிலும் உணவாக உண்டார்கள். இடைவேளைகளில் புழுக்கொடியல், பதநீர் போன்றவற்றை உண்டார்கள். இதன் காரணமாக அவர்கள் மிகவும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். தினைமாவும் பனம் பழச்சாறும் சேர்த்து செய்யப்படும் பனங்காய்ப் பணியாரங்களை வயது வேறுபõடு இன்றி அனைவரும் உண்டு மகிழ்ந்தார்கள். தங்களின் தாகசாந்திக்கு நொங்குகளை பயன்படுத்தியதுடன் பனங்குரும்பைகளை அரித்து கறவை மாடுகளுக்கு உணவாக வழங்கினார்கள்.
யாழ். மாவட்டத்தின் பணப்பயிர்களில் ஒன்றான புகையிலை தென் இந்தியõவிற்கும், தென் இலங்கைக்கும் அனுப்பப்படும் போது புகையிலை சிப்பங்களைக் கட்ட பனை ஓலைகள் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. பஞ்சம் போக்கி என சிறப்பாக குடாநாட்டு மக்களால் அழைக்கப்படுகின்ற பனை வளமானது அக்காலத்தில் சீதனம் வழங்கப்படும் போது பனங்கூடல்களாக முக்கியத்துவம் பெற்றிருந்தது.
'கற்பகம் பொலியும் கடவுட்பனை வாழி' என நவாலியூர் சோம சுந்தர புலவர் கூட பனையை வாழ்த்திப் பாடியிருக்கிறார். எனவே அக்கால யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வோடு பனை இறுகப் பின்னிப் பிணைந்திருந்தது என்பது தெளிவாகின்றது. பனையின் பெருமையறிந்து யாழ்ப்பாணத்தில் தற்போது குறைந்துள்ள பனைவளத்தை வளப்படுத்துவதற்கு வீடுதோறும் பனங்கன்றுகளை நாட்டுவோம்.. அதன் மூலம் பயன் பெறுவோம்

சனி, 10 ஜூலை, 2010

மண்டைதீவை பிறப்பிடமாகக் கொண்ட திரு கனகசபை சிவசரணம்(ஜயாச்சாமி)அவர்களின் ஆத்மசாந்தி அழைப்பிதழ்!

அன்னாரின் இல்லத்தில் 11/08/2010 அன்று நடைபெற்ற ஆத்மசாந்தி பிரார்த்தனையின்
 போது எடுக்கப்பட்ட நிழற்படம்
அல்லையூர் இணையம்.

நம்ம ஊர்க்கல்விமான்!!!

அல்லைப்பிட்டி கல்விமான் பண்டிதர் அமரர் திரு பாவிலு சத்தியசீலன் அவர்களின் வாழ்க்கை குறிப்பிலிருந்து சில பகுதிகள்*************

தந்தை: பாவிலு
தாயார்:விக்ரோறியா
பிறந்த திகதி; 1938/06/15
இறந்த திகதி: 2001/06/30
பிறந்த இடம்:அல்லைப்பிட்டி
கல்வி: கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
                கண்டி பேராதெனியா பல்கலைக்கழகம்
பட்டங்கள்:கவிஞர், பண்டிதர், பயிற்றப்பட்ட ஆசிரியர்(B.A Hons)
                        கொழும்புத் தமிழ்சங்கம் பாவலன்
திருமணம்:1970/08/21
மனைவி பெயர்: கலாதேவி நல்லையா
பிள்ளைகள்: அமிழ்தினி,மேரிமகிழ்மலர், அன்ரன் அருள்வண்ணன், அமிர்தவர்ஷினி
மாமா: நல்லையா
மாமி: தங்கம்மா
சகோதரர்கள்: சலோமை செல்லையாம்மா, பொன்னுத்துரை, சின்னத்துரை, சிலுவைராசா
இவரது நூல்கள்:பாலர் பாட்டு,மழலைத்தமிழ் அமிழ்தம், அணிலாரே (1),பைபிள்
கதைகள், சாள்ஸ்டிபுக்கோ, புத்தியால் வென்ற நரியார்,பாட்டுக்கூத்து,பாட்டுவிளையாட்டு,பன்றியாரை வென்றுவிட்ட பாட்டியம்மா, தூரிகையார், உயிர்காத்த ஓவியம்,கப்பல்,சந்தனப்பொட்டு சுந்தரம்பிள்ளை, உயிருக்காக, ஜஸ்கிறீம்,நத்தார் வாழ்த்து, பொங்கல் வாழ்த்து
சிறுவர் கதை அமுதம்,மதுர கவிதைகள், அருளப்பர் அம்மானை, மேலும் நூலுருப் பெறாத பாடல்கள பல
இவ்வளவு பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய நம்மூர்க் கல்விமானை
அல்லையூர் இணையம் தலைவணங்கி நினைவுகூர்கின்றது.

வெள்ளி, 9 ஜூலை, 2010

மண்டைதீவு கண்ணகி அம்மன் ஆலைய பொங்கல்விழா


உங்கள் விளம்பரங்கள்
அனைத்தையும் இலவசமாக இப்பகுதியில் பதிவுசெய்கினே்றோம் நீங்கள்தேடும்எம் ஊர் மக்களுடனான தொடர்பினைஒரு சில நிமிடங்களில் ஏற்படுத்தித்தருகின்றோம் அனைத்துதொடர்புகளுக்கும் allaipiddy@gmail.com              
பழைய பக்கங்களையும் பார்வையிடுங்கள்

புதன், 7 ஜூலை, 2010

இரண்டு தலைகளுடன் கூடிய கன்றுக் குட்டி!
எகிப்தில் இரண்டு தலைகளுடன் கூடிய கன்றுக்குட்டி ஒன்று கடந்த வாரம் பிறந்துள்ளது. இக்கன்றுக் குட்டிக்கு ஒவ்வொரு தலையிலும் இரண்டு கண்கள், வாய் போன்ற உறுப்புகள் முழுமையாகவே உண்டு. தலைகளின் பாரம் காரணமாக கன்றுக்குட்டி இன்னும் எழுந்து நடமாட முடியவில்லை.

ஆயினும் இது ஆரோக்கியமாகவே உள்ளது. இதற்கு புட்டியில் பால் பருக்கப்படுகின்றது. கன்றுக் குட்டியின் உரிமையாளரான விவசாயி இது ஒரு தெய்வ அதிசயம் என்று வர்ணிக்கின்றார்.

நம்ம ஊர்க்கல்விமான்!!!


அல்லைப்பிட்டி கல்விமான் பண்டிதர் அமரர் திரு பாவிலு சத்தியசீலன் அவர்களின் வாழ்க்கை குறிப்பிலிருந்து சில பகுதிகள்*************

இன்றைய யாழ்ப்பாணம்(சிறப்புப் பார்வை)

இன்றைய யாழ்ப்பாணம் மாற்றித்தினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தியினை நோக்கியதொரு பாதையில் அது உறுதியுடன் பயணித்தாலும் தமிழர்களின் தனித்துவ கலாச்சார அடையாளங்களை இழந்துபோய்விடுவோமா என்ற அச்சத்தையும் அது ஏற்படுத்துகின்றது.
குடாநாட்டில் நிலையாக இருப்பவர்களை விட பிற மாவட்டங்களிலிருந்து நீண்ட நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்குச் செல்பவர்கள் இந்த மாற்றத்தினை இலகுவில் உணர்ந்துகொள்கிறார்கள். அண்மையில் பணி நிமிர்த்தமாக ஐந்து நாட்கள் குடாநாட்டில் தங்கியிருந்த நான் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தேன். இதன்போது அங்கு ஏகப்பட்ட மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதை நான் விளங்கிக்கொண்டேன்.
இந்த மாற்றங்களில் பொரும்பாலானவை ஆக்கபூர்வமானதாகவும் வினைத்திறன் கொண்டதாகவும் இருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. இருப்பினும், நேரெதிர் மாறான விளைவுகளைத் தரவல்ல குறித்த சில அம்சங்களையும் அவதானிக்கமுடிந்தது.
இதுநாள் வரைக்கும் நாட்டினது தென்பகுதிகளில் மாத்திரம் இருந்த தனியார் வங்கிகள், வாடகைக்கொள்வனவு (லீசிங்) நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தக ஸ்தாபனங்கள் என்பன குடாநாட்டின் பல பாகங்களிலும் தங்களது கிளைகளைத் திறந்துவருகின்றன.
வழமைபோலவே குடாநாட்டு மக்களிடத்தே செல்வம் நிறைந்து கிடக்கிறது. தங்க ஆபரணங்களாகவும், நிலையான வைப்பிலுள்ள பணமாகவும் அசையும், அசையாச் சொத்துக்களாகவும் இவை இருக்கின்றன. புலம்பெயர்வாழ் நாடுகளில் யாழ்ப்பாணத்தவர்கள் அதிகம் இருப்பதும் குடாநாட்டுக்கு அந்நியச் செலாவணி வந்து குவிவதற்கான பிரதான காரணம். புலம்பெயர் நாடுகளில் வசித்துவரும் அண்ணளவாக 750,000 ஈழத்தமிழர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தவர்களே என புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது.
குடாநாட்டில் துரித கதியில் கடைவிரிக்கும் இந்தத் தனியார் வங்கிகளின் குறி அங்கு குவிந்திருக்கும் தங்க நகைகளிடத்திலும், அவர்களது பணத்திலுமே இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
குடாநாட்டில் களவுகள் அதிகரித்துவிட்டமையினால் தங்களது நகைகள் மற்றும் பணத்தினை வங்கிகளில் பத்திரப்படுத்தவே மக்கள் வரும்புகிறார்கள்.
மக்களுக்கான சேவை என்பதற்கு அப்பால், தங்களது வருமானத்தினைப் பெருக்கிக்கொள்வதற்கான ஒரு உபாயமாக தனியார் மற்றும் அரச வங்கிகள் தங்களது கிளைகளை வேகமாகத் திறந்து வருகின்றன. இருப்பினும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந்த வங்கிகள் தொழில் முயற்சிகளுக்கான கடன்திட்டங்களையும் குடாநாட்டில் முன்னெடுத்து வருவது இங்கு குறிப்பிட்டத்தக்கது.
குடாநாட்டுக்குச் செல்லும் யாழ் கண்டி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பல்வேறுபட்ட பொருட்களின் பிரமாண்டமான விளம்பரக் கட்டவுட்களைக் காண முடிகிறது. குடாநாட்டில் தமக்கான சந்தை வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதனால் அனைவருமே யாழ்ப்பாணத்துச் சந்தையில் தமக்கென்றோர் இடத்தினைப் பிடிப்பதற்கு முண்டியடிக்கிறார்கள்.
இது தவிர, குடாநாட்டில் தற்போது உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளும் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. உதாரணமாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் யாழ்ப்பாணம் தொடக்கம் பருத்தித்துறை வரையிலான வீதி அகலமாக்கப்பட்டு தாரிடப்பட்டு வருகிறது.
காங்கேசன்துறைச் சீமெந்து ஆலையினை மீளவும் இயக்குவதற்கான முன்முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இது தவிர, குடாநாட்டுக்கான தொடரூந்துப் பாதையினை மீளவும் அமைக்கும் வகையில் தொடருந்துப் பாதையினை அண்மித்த பகுதிகளில் கண்ணிவெடியகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தவர்களைப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவைக்கும் ஒரு முனைப்பாக கொழும்புப் பங்குச் சந்தையின் கிளையொன்று அண்மையில் யாழ் நகரத்தில் திறக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் முதலிடுவதற்கு ஆர்வத்துடன் இருக்கும் யாழ்ப்பாணத்து வர்த்தகர்கள் மற்றும் மக்களின் வேண்டுகையினை ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே கொழும்பு பங்குச்சந்தை யாழ்ப்பாணத்தில் தனது கிளையினைத் திறக்கும் முடிவினை எடுத்ததாக அதன் அலுவலர் ஒருவர் கூறுகிறார்.
குடாநாட்டு மக்கள் மத்தியிலிருக்கும் பணத்தினைக் கறப்பதற்கான இன்னொரு முனைப்பே இது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு சனவரியில் யாழ் – கண்டி நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக குடாநாட்டு உற்பத்திப்பொருட்கள் தெற்கிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக சின்னவெங்காயம், வாழைக்குலை, புகையிலை, திராட்சைப்பழம் மற்றும் பனம்பொருள் உற்பத்திகள் போன்ற குடாநாட்டு உற்பத்திகள் தெற்கின் சந்தைகளுக்குக் கொண்டுவரப்படுகின்றன.
2009ஆம் ஆண்டு 52 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் செய்கைபண்ணப்பட்ட திராட்சைப்பழம் இந்த ஆண்டு 56 ஹெக்ரெயராக அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டினது முதற்காலாண்டுப் பகுதியில் குடாநாட்டில் அறுவடை செய்யப்பட்ட திராட்சைப்பழங்கள் ஏ9 நெடுஞ்சாலை மீளவும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பிற மாவட்டச் சந்தைகளிலும் பெருமளவில் விற்பனையாகியமை குறிப்பிடத்தக்கது. தற்போது குடாநாட்டில் அதிக சுவைகொண்ட திராட்சை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டினது ஏனைய பாகங்களிலிந்து குடாநாடு துண்டிக்கப்பட்டிருந்தமையினால் திராட்சைப்பழத்திற்கான கிராக்கி குடாநாட்டில் குறைவடைந்திருந்தது. இதன்விளைவாக திராட்சைப்பழச் செய்கையினை மேற்கொள்வதில விவசாயிகள் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது.
தற்போது குடாநாட்டில் பரவலாக அறுவடைசெய்யப்படும் சின்னவெங்காயம் பெருமளவில் தம்புல்லை பொருளாதார மையத்திற்கு வந்துசேர்கிறது. இந்த அறுவடைக் காலத்தில் குடாநாட்டிலிருந்து தினமும் 110,000 கிலோ சின்ன வெங்காயம் தம்புல்லைச் சந்தைக்கு வந்துசேர்வதாக தம்புல்லைப் பொருளாதார அபிவிருத்திச் சமூகத்தின் தலைவர் தயானந்தசிறி கூறுகிறார். குடாநாட்டில் விவசாயிகளிடமிருந்து 20 தொடக்கம் 30 ரூபாய்க்குக் கொள்வனவு செய்யப்படும் சின்ன வெங்காயம் தம்புள்ளைச் சந்தையில் 45 தொடக்கம் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென்பகுதிச் சிங்களவர்களின் வடக்கு நோக்கிய படையெடுப்புத் தொடர்பில் சொல்லவே தேவையில்லை. தினமும் 300 தொடக்கம் 350 பேருந்துகளிலும் சிற்றூர்திகளிலும் இவர்கள் குடாநாட்டுக்குச் செல்கிறார்கள். இவர்களுக்காகவே ஏ9 வீதியோரங்களில் படையினர் உணவகங்களைத் திறந்திருக்கிறார்கள். ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான 132 கி.மீ நீளமான வீதியோரத்தில் 35க்கும் மேற்பட்ட படையினரின் உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களுக்கு அருகே இவர்களுக்காகக் கழிப்பிட வசதிகளையும் குளித்து உடைமாற்றுவதற்கான வசதிகளையும் படையினரே ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்கள்.
கிளிநொச்சியில் சந்திரன் பூங்கா அமைந்திருந்த இடத்தில் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரின் நினைவுத்தூபி, ஆனையிறவின் உல்லாசவிடுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் கவசவாகனமாகப் பயன்படுத்திய புள்டோசர் இருக்கும் பகுதி, ஆனையிறவுக் கோட்டைக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் படையினரின் பிரமாண்டமான நினைவுத்தூபி, யாழ் நூலகம், நயினாதீவிலுள்ள நாக விகாரை, ஆரியகுளம் சந்தியிலுள்ள விகாரை, நல்லூர் கந்தசுவாமி கோவில், வடமராட்சியின் வல்வெட்டித்துறையிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது சிறுபராய வீடு, படையினரால் இடித்தழிக்கப்பட்டிருக்கும் துயிலகங்கள் என்பன தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள உல்லாசப்பயணிகைளப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.
இவை தவிர புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் யாழ்ப்பாணத்தவர்கள் தற்போது குடாநாட்டுக்கு வருவது பெரிதும் அதிகரித்திருக்கிறது. நாளொன்றுக்கு 60க்கும் அதிகமான குடும்பங்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்து குடாநாட்டுக்குள் வருகிறார்கள்.
இவ்வாறாக உள்ளூர் உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதனால் குடாநாட்டில் சிறு வியாபாரம் என்றுமில்லாதளவிற்கு அதிகரித்திருக்கிறது. இவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரைகுறை வசதிகளுடன் கூடிய தங்ககங்கள் பல முளைத்திருக்கின்றன. குடாநாட்டுக்குப் படையெடுக்கும் சிங்கள உல்லாசப் பயணிகள் இரவில் படுத்துறங்குவதற்கே இடமின்றி, துரையப்பா விளையாட்டரங்கில் இராப் பொழுதைக் கழிப்பதை அவதானிக்க முடிகிறது.
இவை தவிர, தென்பகுதியினைச் சேர்ந்த சிங்கள மற்றும் முஸ்லீம் வியாபாரிகள் பலர் குடாநாட்டின் நகர வீதியோரங்களில் சிறுவியாபாரத்தில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது. பேருந்து நிலையத்தில் கைகளில் சில அலங்காரப் பொருட்களுடன் சிங்கள வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகிறது.
குடாநாட்டு வீதிகளில் முன்னர் இருந்த சிங்கள இராணுவத்தினரின் கெடுபிடிகள் தற்போது பெரிதும் குறைந்திருப்பதாக நகர மக்கள் கூறுகிறார்கள். ஒப்பீட்டளவில் சோதனைச் சாவடிகளின் அளவுகள் பெரிதும் குறைந்திருக்கின்றன. எது எவ்வாறிருப்பினும் குடாநாட்டில் தனியார் மற்றும் பொதுக் கட்டங்கள் மற்றும் நிலங்களில் இன்னமும் படையினர் குந்தியிருக்கிறார்கள். உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பொதுமக்களது சொத்துக்களைப் படையினர் தொடர்ந்தும் தம்வசப்படுத்தியே வைத்திருக்கிறார்கள்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெயர்ந்து வசிக்கும் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான ஒருங்கிணைத்த முனைப்புக்கள் எதுவும் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. வலிகாமம் வடக்கில் மாத்திரம் 24,000க்கும் அதிகமானவர்கள் தற்போதும் இடம்பெயர்ந்து வசிக்கிறார்கள்.
குடாநாட்டில் மொத்தமாக உள்ள பெண்களில் விதவைகள் மற்றும் அங்கவீனமடைந்த பெண்கள் 46 சதவீதம் இருப்பதாக அண்மையில் சிறிலங்காவினது சமூக சேவைகள் அமைச்சு தகவல் வெளியிட்டிருக்கிறது. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகம். குடாநாட்டில் மாத்திரம் 26300 யுத்த விதவைகள் இருக்கிறார்கள். பெரும்பாலும் பெண்களைக் குடும்பத் தலைமையாகக் கொண்ட இந்தக் குடும்பங்கள் தமக்கான தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சுயதொழில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டியது அவசியமாகிறது.
இவ்வாறாக குடாநாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருப்பது என்னவோ உண்மைதான். வேலையில்லாப் பிரச்சினை, வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமை, சுதந்திரமான நடமாட்டம் என பல பிரச்சினைகள் இன்னமும் குடாநாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. குடாநாட்டினைப் பொறுத்தவரையில் பலநூற்றுக்கணக்கான பல்லைக்கழகப் பட்டதாரிகள் கூட இன்றும் வேலையில்லாமல் இருக்கிறார்.
சமூகச் சீர்கேடுகள் பெரிதாக வெளியே தெரிவதில்லை என்றாலும், குடாநாட்டில் இதுபோன்ற செயற்பாடுகள் தற்போது அதிகம் காணப்படுகிறது. இளம் தலைமுறையினர் பெரிதும் மாறிவிட்டார்கள் என யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த கல்விமான் ஒருவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார். மேற்கத்தேய உடையணிந்த உள்ளூர் பெண்களை நகர வீதிகளில் தற்போது அதிகம் காணமுடிகிறது.
குடாநாட்டில் உள்ளூர் சேவையில் ஈடுபட்டிருக்கும் பேருந்துகளின் பின் இருக்கைகளில் திருமணமாகாத இளம் சோடிகளை அதிகம் காணமுடிகிறது. அந்தரங்கமானதொரு இடத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில், பேருந்தில் பிரயாணம் செய்யும் ஏயைவர்களின் முகம் சுழிக்கும் படி இவர்கள் நடத்துகொள்வது அருவருப்பானது.
குடாநாட்டில் இளம் வயதினர் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்குப் பலவேறுபட்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. போர் தந்த இழப்புக்களால் ஏற்பட்ட மன அழுத்தமும் இதற்கானதொரு காரணம்.
எது எவ்வாறிருப்பினும் குடாநாடு பெரிதும் மாறிவிட்டது. இந்த மாற்றங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுகிறது எனச் சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், கலாச்சார ரீதியிலான அதன் தனித்துவத்தினை யாழ்ப்பாணம் மெல்ல இழந்து வருகிறது என்பதுதான் உண்மை.

செவ்வாய், 6 ஜூலை, 2010

கை வீசுங்க,கை வீசுங்க,ஊருக்குப் போகலாம் கைவீசுங்க!


இனி  வெய்யிலும் வெளிச்சமுமாக மக்கள் கோடையைக் கொண்டாடித் திளைப்பார்கள். எந்தத் திகதியில் எங்கே போவது? எவ்வளவு காலந் தங்குவது ? என்ற அடுத்த இரண்டு மாதங்களுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து விடுவார்கள்.

எங்களுக்கு விடுமுறை ஆரம்பமாகி விட்டது. கடைசி நாளில் எல்லோரிடமும் கேட்கப்பட்ட கேள்வி ‘இவ்வருட விடுமுறைக் காலத்தின் திட்டங்கள் என்ன?” என்பது தான். எங்கள் ஆசிரியர் தனது கோடைக் காலத்தை அழகிய கடற்கரைப் பிரதேசமொன்றில் கழிக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். மிகுந்த ஆர்வத்துடன் பிரான்சின் வரைபடத்தைச் சுவரிற் கொழுவினார். அதிலே தான் தெரிவு செய்திருந்த பிரான்சின் மாகாணங்களில் ஒன்றாகவிருக்கும் பிரிட்டனின் (Breton) கடலோர நகரமொன்றைத் தொட்டுக்காட்டி  அது வளைவுகளும் நெளிவுகளுமாகக் கடலோரத்தைக் கொண்டிருப்பதாகவும் படகு விளையாட்டுகளுக்குச் சாதகமான காற்று வீசும் இடமெனவும் சொன்னார்.
ஒவ்வொருவரும் தங்களுடைய நேர அட்டவணை நாட்களிடமிருந்து தப்பித்து, வெய்யில் சுடும் நாட்களைச் சந்திக்கப் போவதையும் தமது திட்டங்களையும் சொல்லிக் கொண்டிருந்தனர். மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர் அடுத்துவரும் இரண்டு மாதங்களையும் தன் கிராமத்தில் கழிக்கப் போவதாகச் சொன்னார். அதே போல் அல்ஜீரிய நாட்டவர்கள் தம் நாட்டிற்குச் சென்று தங்குவது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தனர். இவ்வாறே எகிப்து நாட்டுப் பெண் ஒருவரும் விடுமுறைக் காலத்தை தன்நாட்டில் அனுபவிப்பதைக் கண்கள் விரித்து விபரித்தார்.
ஆனால் , இவர்கள் எல்லோரும்  ஒவ்வொருஆண்டும் சென்று வருபவர்களே. அவை அதிக செலவுகளற்றதும் இலகுவான,  குறைந்த தூரப் பயணங்களுமாக  இருப்பவை.
ஆயினும் ,  என் சகாக்களைப் போல அந்நாட்டவர்கள் எல்லோரும் இல்லை.  கோடை காலத்தில் ஓய்வெடுக்கக் கூடிய வேலையிலில்லாதவர்களும் பொருளாதாரத்தில் பின் நிற்பவர்களுமான மொரோக்கோ,அல்ஜீரிய ஏனைய நாட்டவர்களுக்கு இது சாத்தியமில்லைத் தான். அவர்களின் கனவும் ஏக்கமுமாக அது இருக்கும். வேலை, வசிப்பிடம் , செலவுக்குப் பணம் என்று செட்டிலாகி விட்டவர்கள் ஓய்வைக் கொண்டாடிக் கொள்கின்றனர்.
எங்கள் நாட்டிலிருப்பதைப் போல எப்ப? எங்க? நம் உயிருக்கு எதுவும் நடக்கலாமோ? என்ற அச்சமின்றி வெருட்சியில்லாத நாட்களாக அவர்களுக்குத் தம் நாட்டுப் பயணம் அமைந்திருப்பதைப்  போல ,  நானும் கற்பனை செய்து பார்க்க அந்த ஊருக்குப் போகும் பயணக் கதைகள் என்னைத் தூண்டின.
என்ன தான் சண்டை முடிந்து விட்டதாக எவர் சொன்னாலும், அதற்குப் பின்னால் விளக்கும் அரசியற் கதைகளை நினைக்காமல் விட்டாலும், இராணுவம் படை படையாகப் பாய்ந்து வந்ததைப் பார்த்தவர்களுக்கு, கைது செய்து கண்ணைக் கட்டி இழுத்துச் சென்றதை அனுபவித்தவர்களுக்கு அல்லது அதையெல்லாம் கண்டவர்களுக்கு, சரசரவென வானத்திலிருந்து  தலைக்கு மேலே குண்டுகள்  விழுந்த வாழ்க்கை அனுபவித்தவர்களுக்கு, எரிக்கப்பட்டும் சுடுபட்டும் உடல்கள் கிடந்ததைக் கண்டவர்களுக்கு, பாலியல் வன்முறையை  இன்னும் பல கொடுமைகளை  அந்நாட்டில் கேட்டும் அனுபவித்தும் வாழ்ந்தவர்களுக்கு, அந்தப் பச்சை உடுப்புகளும் துப்பாக்கிகளும் பயமுறுத்துபவையாகவே இருக்கின்றன. புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டார்கள், போர் முடிந்து விட்டது , ஆகவே பயமின்றி நாட்டுக்குப் போய் வரலாமெனச் சொல்வதைப் போலவே, இராணுவம் ஊருக்குள் இல்லை என்பதும் தேவையாகவுள்ளது. இதே போல கடற்படை,கட்டுக்குள் அடங்காத படைகளின் அட்டகாசங்கள் பயமுறுத்தும் அனுபவங்களும் இருக்கின்றன.
எமது வகுப்பிலிருந்த தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் லண்டன், யேர்மனி, சுவிஸ், சொந்தக்காரர்களின் வீடுகள் தான் இருந்தன. ஆனால், இப்போது கூட்டங் கூட்டமாகக் கொழும்பில் இறங்கிக் கொண்டிருக்கும் புலம் பெயர்ந்து வேரூன்றி விழுது பரப்பிய தமிழர்களின், விடுமுறைக் காலத்திற்குச் செல்லும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகி விட்டது. முன்னைய பந்திக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாததாகவே தோன்றும். அது அவரவர் சந்தித்த துயரங்களின் அளவையும் தப்பித்து வந்து விட்ட காலத்தையும் பொறுத்ததும் மற்றுமோர் நாட்டின் பிரசையாகி விட்ட காரணமுமாக இருக்கலாம்.
அவற்றைத் தவிர  அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படாத இலங்கைத் தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவ்விதமான உல்லாசப் பயணிகளின் தொகை அதிகரித்தால் அகதி நிலைக்காகக் காத்திருக்கும் தங்கள் விண்ணப்பங்களின் கதி என்னாவது? நாட்டுக்குப் போய் விடுமுறையைக் கழிக்கும் மக்களால் அவ்விண்ணப்பங்களுக்கு உலை வைக்கப்படக் கூடுமென்று கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது, ஏனைய நாட்டவர்களால் கேட்கப்பட்ட கேள்வி ‘உங்கள் நாட்டிலிருந்து வந்து எத்தனை வருடங்களாகின்றன?”      நாம் ஒவ்வொருவரும் பதினைந்து, பத்து, எட்டு என்று சொன்னதை அவர்களால் செமித்துக் கொள்ள முடியவில்லை. ‘பெற்றோரைப் பார்க்காமல், உங்கள் வீதிகளில் வேற்றாளாக நானில்லை என்ற உணர்வுடன் உலாத்தித் திரியாமல் எப்படித் தான் வாழ்கின்றீர்கள்?” என்று கேட்டுக் கேட்டுப் பரிதாபப் பார்வைகள் பார்த்தனர்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்களும் வருடத்துக்கொரு தடவை , இரண்டு வருடங்களுக்கொரு முறையெனப் போய் வருவார்கள். எங்கள் ஆசிரியர் ‘பாண்டிச்சேரிக்கு ஒரு தடவையாவது போக வேண்டுமென்பது தன் வாழ் நாள் கனவாக இருக்கிறது” எனச் சொன்னார்.
இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதையிருந்தது. தாங்கள் ஊரைப் பார்க்க முடியாத ஏக்கத்தைத் திரும்பத் திரும்ப அரசியற் பிரச்சனை தங்களைப் பல விதங்களிலுமாக அள்ளிக் கொண்டு வந்து போட்டதைப் போட்டி போட்டுச் சொல்லிக் கொள்கிறோம்.
ஆசிரியரால் பின்வரும் கேள்விகள் அங்கே கேட்கப்பட்டன.
1. இலங்கைத் தீவில் உங்கள் கிராமம்   தலைநகரத்திலிருந்து எத்தனை  கிலோமீற்றர் தொலைவிலிருக்கிறது?2. மூன்று மொழிகள் பேசும் நாட்டின் உத்தியோகபூர்வ மொழி என்ன?3. பள்ளிக்கூடத்தில் என்ன மொழியில் கல்வி கற்கிறீர்கள்?
குத்து மதிப்பாக அவரவர் ஊர்களிலிருந்து தலைநகரம் இருக்கும் தூரத்தைச் சொன்னோம். சிங்களமும் தமிழுமென அரசாங்கம் சொல்கிறதாகவும் ,அவரவர் தாய் மொழியில் படித்தோம் என்றும் சொன்னதைக் கேட்டவர், சிங்களவரும் தமிழரும் சந்தித்தால் என்ன மொழியில் பேசுவீர்கள் என்ற கெட்டித்தனமான கேள்வியைச் சரேலென வீசினார்.அதற்காகத் தானே இரு இனத்தவரும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் படித்திருக்கிறோம் என்று விடாமல் சொன்னதும்,அலட்சியமான சிரிப்பொன்றுடன் ஆங்கிலேயர்களின் காலனியின் கீழ் தானா இரு இனங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன? ஏன் பெரும்பான்மைச் சமூகத்துடன் கலந்து முன்னேற அவர்களது மொழியைக் கற்காமல் விட்டீர்கள் ? என்றவர் தொடர்ந்து, ‘பிரான்சிலும் முன்னர் ஏறக்குறைய ஆறு பிரதான மொழிகளும் அவற்றின் உட்பிரிவுகளுமாகப்  பாவனையில் இருந்தன. ஆனால் , தற்போது பிரெஞ் மட்டுமே என்ற நடைமுறையால் நாட்டின் சகல பகுதியினரும் பின் தள்ளப்படாமல் அனைத்திலும் ஒரே மாதிரியாகவே சலுகைகளும் உரிமைகளும் பெற்று சிறுதொகையினர் என்ற அடைப்பிலிருந்து மொழியினால் ஒன்றாக்கப்பட்டு எல்லாவற்றிலும் பங்களிக்கக் கூடியதாக இருக்கிறதெனச் சொல்லியவர், இதுவரை காலங்களாகப் பல பேச்சு வார்த்தைகளும் ஒப்பந்தங்களும் ,இந்தியாவும் நோர்வேயும் தலையிட்டும் தீர்த்து வைக்கப் படாத இலங்கைத்தீவின் இனப் பிரச்சனையை, அதை மிக இலகவாக முடித்திருக்கக் கூடிய கருத்தொன்று சொல்கிறேன் என இவ்வாறு சொன்னார் .  “இலங்கை மக்கள் எல்லோரும் ஒரே மொழியில் கல்வி கற்பது ஒன்றே இதற்கான ஒரே தீர்வு”.  இதைச் சொல்லி விட்டு பெரும் அலையொன்றுக்கு எத்துப்பட்டு தூக்கியெறியப்பட்ட படகைப் போல உதடுகளை ஒரு பக்கம் சாய்த்து     வெற்றிச் சிரிப்பொன்றை முற்றுப் புள்ளியாக்கினார்.


மக்கள் புரட்சி செய்து சனநாயகம் பிறந்த  பிரான்ஸ் நாட்டில் அது சாத்தியமே. மக்களுக்கு எல்லா உரிமைகளுக்கும் வழிவகை செய்த பின்னர் ஒரு மொழியின் கீழ் ஒன்றித்தலில் பிரச்சனையில்லைத் தான். பொருளாதாரமும் மக்களிடையிலான உயர்வு தாழ்வும் சமனில்லாத நாட்டில் அவரவர் மொழியைக் கைவிட்டு விடுதல் அடக்கப்படுதலையும் ஒடுக்கப் படுவதையும் பலப் படுத்துமேயன்றி வேறென்ன? வலிந்து திணிக்காத மொழி தான், இனங்களை ஒன்றாக்கும். இங்கே மொழியல்ல உரிமையே பிரச்சனைகளுக்கான காரணமாகி நிற்கின்றதென எங்களுடைய நாட்டில் ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளிலிருந்து தொடர்ந்த வரலாறு சொல்ல அந்த ஒரு நாள் போதுமானதாயில்லை.



தர்மினி-

அல்லை பராசக்தி வித்தியாசாலையின் O/Lபெறுபேறுகளில் வீழ்ச்சி
இலங்கையில் இந்தஆண்டு நடந்துமுடிந்த கல்வி பொதுத்தராதர சாதாரண
பரீட்சையின் முடிவுகளின் படி அதாவது O/L முடிவுகளின் படி அல்லை பராசக்தி
வித்தியாசாலையில் இருந்து ஒரு மாணவர்களும் சித்தியடையவில்லை
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான காரணம் பரீட்சைநேரம் நாட்டில்
ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையும் மக்கள் இடப்பெயர்வுமே ! இருந்தபோதும்
மீண்டும் வழமைபோல் 300க்கும் அதிகமான மாணவர்களுடன் அதிபர் உட்பட
14 ஆசிரியர்களுடன் மீண்டும் சிறப்பாக பாடசாலை செயல்ப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.