ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

அல்லை பராசக்தி வித்தியாசாலைக்கு வித்திட்ட வள்ளல்!

திரு பொன்னம்பலம் சிதம்பரநாதர் அவர்கள்
அல்லை பராசக்தியின்
இலட்சினை
அமரர்திரு பொன்னம்பலம் சிதம்பரநாதர் அவர்கள்
ஆரம்பித்து வைத்த கல்விக்கூடத்திற்கு வயது
அறுபது வருடங்கள் ஆகி 2001 இல் வைரவிழா கண்டது.
எமது பாடசாலைக்கு விதையிட்ட,
வள்ளலுக்கு பழைய மாணவர்சங்கம் நன்றியுடன்
கைகூப்பி வணங்குகின்றது.


3 commentaires:

  1. இ. சொ. லிங்கதாசன், டென்மார்க்.13 செப்டம்பர், 2010 அன்று PM 10:01

    உங்கள் தகவலுக்கும், புகைப்படத்திற்கும் நன்றிகளும், பாராட்டுக்களும். ஒரு சிறிய திருத்தம்:- "அல்லைப்பிட்டியில் ஒரு பாடசாலை உருவாகி 69 வருடங்கள் மட்டுமே ஆகிறது". என்பது போன்ற ஒரு தவறான அபிப்பிராயத்தை தயவு செய்து ஏற்படுத்த வேண்டாம். அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம் உருவாகியது 1907 ஆம் ஆண்டில், அது உருவாகும்போது அப்பாடசாலையின் பெயர் அ.மி.த.க. பாடசாலை என்பதாகும். அதன் பின்னர் 1941 ஆம் ஆண்டில் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாசாலையாகவும், 1998 இல் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயமாகவும் பெயர் மாற்றம் பெற்றது. 2007 ஆம் ஆண்டில் 'நூற்றாண்டு விழா' கொண்டாட வேண்டிய பாடசாலை, நாட்டுச் சூழ்நிலை காரணமாகவும், பழைய மாணவர்களுக்கிடையில் ஒருங்கிணைப்பின்மை காரணமாகவும் கொண்டாடப்பட முடியாது போய்விட்டது. எனது கருத்துக்கு ஆதரவான 'ஆதாரம்' என்னிடம் உள்ளது. எனவே "2001இல் வைரவிழா கண்டது" என்ற உங்கள் கருத்தை "மறுபரிசீலனை" செய்யவும்.
    ஆழ்ந்த வேதனையுடன்,
    பழைய மாணவன்:
    இ.சொ.லிங்கதாசன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தம்பி லிங்கதாசன் அவர்களே நீங்கள்
    சுட்டிக்காட்டிய கருத்தை எமது கவனத்தில் எடுத்துள்ளோம். அதேநேரம் நாம் வெளியிட்ட தகவல்
    அல்லை பராசக்தி 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
    ஆண்டு மலரில் இருந்தே எடுத்தோம் என்பதனை
    தங்களிடம் தெரிவிக்கின்றோம்.கீழ் காணும் முகவரியில்
    சென்று பார்வையிடவும்.நன்றி
    www.allaiparasakthi.pizco.com

    பதிலளிநீக்கு
  3. இ.சொ.லிங்கதாசன்.,டென்மார்க்14 செப்டம்பர், 2010 அன்று PM 9:55

    வைரவிழா மலர் வெளியிடப்பட்ட ஆண்டுக்கும், வைரவிழா கொண்டாடப்பட வேண்டிய காலப்பகுதிக்கும் இடையிலான வேறுபாடு நமக்கு வேறு ஒரு தகவலைச் சொல்கிறதல்லவா? எது எவ்வாறிருப்பினும், எனது விமர்சனத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்டமைக்கும், உடனடியாகப் பிரதிபலிப்புக் காட்டியமைக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்.
    இ.சொ.லிங்கதாசன்.

    பதிலளிநீக்கு