புதன், 1 செப்டம்பர், 2010

பிரான்ஸில் அரசியல்த் தஞ்சம் மறுக்கப் பட்டதால் வாலிபர் தற்கொலை

பிரான்ஸில் பாரிஸ் நகரத்தில் இருந்து சுமார் 250கிலோமீற்றர்கள் தொலைவிலே அமைந்துள்ளது தூர் நகரம். இந்த நகரத்திலேயே, தனது நண்பர் ஒருவரது வீட்டில் தற்காலிகமாகத் தங்கி இருந்தார் சிவதாசன் சின்னத்தம்பி (03/10/1982).

இந்த நகரைச்சுற்றி ஆறு ஒன்று ஓடிக்கொன்டே இருக்கிறது, இந்த ஆறு பண்டய பிரென்ச் அரசர்களாள் வெட்டப்பட்டது. இந்த நகரதில் பழைய அரசர்களின் கோட்டைகளுக்குப் பஞ்சம் இல்லை. மிக அழகான இந்த நகரத்துக்கு ஒவ்வொரு கோடை காலத்துக்கும் உல்லாசப்பயணிகள் படையெடுத்து விடுவார்கள்.


சிவதாசன் சின்னத்தம்பி என்ற இளம் வாலிபர் தனது அரசியல்த் தஞ்சம் கோரும் விண்ணப்பதை « Office français de protection des réfugiés et apatrides » அல்லது OFPRA (பிரான்ஸின் அரசியல் தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நிறுவனம்) இல் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் இவரது இந்த விண்ணப்பத்தை OFPRA நிராகரித்து விட்டது. இந்த நிராகரிப்புக்கு மனம் தளராத இவ் வாலிபர், இந்த நிராகரிப்பை மறு பரிசீலனை செய்யுமாறு கோர்ட்டில் விண்ணபித்தார்.


எப்படியாவது தனது அரசியல்த் தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்பினார். ஆனால் மீழ்பரிசீலனையின் பின்னரும், அவரது அரசியல்த் தஞ்ச்சக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டுவிட்டதால், மிகவும் மனம் உடைந்து போன யாழ்ப்பாணம் தென்மராட்சி வடவரணி மாசேரியைப் பிறப்பிடமாககக் கொண்ட சிவதாசன் சின்னத்தம்பி வயது 28,இந்த நகரதைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றங் கரைக்குச் சென்று அங்குள்ள ஒரு மரத்திலே தூக்கு மாட்டித் தற்கொலை செய்து விட்டார். பாரீசில் வாழும் இவரது மாமா, மாமி இவரது உடலைப் பார்வை இட்டு இவர் சிவதாசன் சின்னத்தம்பி என்று பொலீசாருக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

0 commentaires:

கருத்துரையிடுக