புதன், 1 செப்டம்பர், 2010

இரண்டு கால்களுடன் ஆடு அதிசயம்!

சீனாவின் சாண்டொங் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 2 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியொன்று இன்று வரை உயிர் வாழ்ந்து வருவது அனைவரினதும் கவனத்தினை ஈர்த்துள்ளது. 

எனினும் இதன் நீண்ட ஆயுட்காலம் தொடர்பாக அமெரிக்காவைச்ச் சேர்ந்த விலங்கியல் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

மேற்படி ஆட்டுக் குட்டியானது சாண்டொங் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சொந்தமானதாகும். 

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவ்விவசாயி இக்குட்டி பிறந்தவுடன் இதன் உருவத்தைக் கண்டு இதன் ஆயுட்காலம் தொடர்பாக தாம் சந்தேகம் கொண்டதாகவும் எனவே இதனை தாம் குப்பையில் வீசிவிட எண்ணியிருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார். 

"இது தற்போது குட்டியாக இருப்பதால் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனாலும் இது 125 பவுண்ட்ஸ் எடை வரை வளரக் கூடியது. எனவே எதிர்காலத்தில் இந்தப் பாரத்தினை இவ்விரு கால்களினால் மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது" என விலங்கியல் பராமரிப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் இதற்கான நிரந்தரத் தீர்வு செயற்கையாக மேலும் இரு கால்களைப் பொருத்துவதே எனவும் ஆலோசனை தெரிவிக்கப்படுகின்றது. 

பொதுவாக இவ்வாறு அதிசயத்துடன் பிறக்கும் ஜீவராசிகள் பிறந்த ஓரிரு தினங்களில் இறந்து விடுவதுண்டு. ஆனால் இந்த ஆட்டுக் குட்டிக்கு ஆயுசு கெட்டித் தான் போலும். கடந்த எட்டு மாதங்களாக உயிருடன் இருக்கின்றதே...

0 commentaires:

கருத்துரையிடுக