சனி, 4 செப்டம்பர், 2010

பாரீஸில் தமிழர்களை இலக்கு வைத்து திருட்டுக்கள் அதிகரிப்பு!

பிரான்ஸின் தலைநகர் பாரீஸில் தமிழ்மக்களை,இலக்கு வைத்துதிருட்டுக்கள்இடம்பெற்றுவருகின்றன.திருடர்களினால் பாதிக்கப்பட்டவர்கள்,காவல்
துறையிடம் புகார் தெரிவிக்க தயங்குவதனால்,திருடர்கள் மேலும் தொடர்ந்து
தமது கைவரிசையைக் காட்டிவருகின்றனா்.அண்மையில் பாரீஸில் இடம்
பெற்ற திருட்டுக்கள் பற்றி அல்லையூர் இணையத்திற்கு கிடைத்த ஆதாரமான
தகவல்களின்படி சிலவற்றை தருகின்றோம்.

பாரீஸ் லாசப்பலில் உள்ள தமிழ் கடை ஒன்றுக்குள் மாலைநேரத்தில்
புகுந்த இனம்தெரியாத,இரு ஆபிரிக்க இளைஞர்கள் கடையில் நின்ற இளைஞனை கடுமையாகத் தாக்கிவிட்டு பெருந்தொகைப் பணத்தை கொள்ளை
இட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
2)தமிழ் இளைஞர் ஒருவருடைய bank அட்டையை மதிநுட்பமாகத் திருடி
1500 யூரோக்களுக்கு மேல் பொருட்களை கொள்வனவு செய்தது தெரிய வந்துள்ளது.
3)கோயில் திருவிழாவின் போது,கழுத்திலிருந்த தாலிக்கொடியை நவீனகருவி
மூலம் வெட்டிக் களவாடப்பட்டுள்ளது.
4)சம்பளப்பணத்துடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த தமிழ் இளைஞனை
வழிமறித்த குழு ஒன்று அவரை கடுமையாக தாக்கிவிட்டு பணத்தை பறித்துக்
கொண்டு ஓடி மறைந்தது.
இதே போன்று பல திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெறுவதால்
தமிழ் மக்கள் மிகவும் விழிப்போடு இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 commentaires:

கருத்துரையிடுக