புதன், 4 ஆகஸ்ட், 2010

புலம்பெயர் மண்டைதீவு மக்களுக்கு அவசர வேண்டுகோள்!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மண் டைதீவு பிரதேசத்தில் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து வருவதாக இனங்காணப் பட்டுள்ளது. இதனை யடு த்து வேலணைப் பிரதேச சபையின் மண்டைதீவு உப அலுவலகமும் மண்டைதீவுப் பிரதேசத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் கிராம அலுவலர்கள் இணைந்து இன்று (03.08.2010) இந் நோய் பற்றிய விழிப்புணர்வினை ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு வழங்கினர்.
மண்டைதீவு பேதுருவானவர் ஆலயம்
மண்டைதீவு மகாவித்தியாலயம்
இந் நிகழ்வு காலை 11 மணியளவில் இருந்து பிற்பகல் 2.30 மணி வரையும் இடம்பெற்றது.
இதில் வேலணை பிரதேச சபையின் மண்டைதீவு உப அலுவலகப் பொறுப்பதிகாரி ச.அருணன் , மண்டைதீவுப் பிரதேசத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர் ம.அனுசூதனன் மற்றும் கிராம அலுவலர் ம.சசிக்காந் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை டெங்கு நோய் பரவும் பகுதிகளாக இனங்காணப்பட்ட காணி உரிமையாளர்கள் இன்றிலிருந்து 14 நாள்களுக்குள் அதனைத் துப்புரவு செய்யாத பட்சத்தில் 6 மாத சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறான காணிகளின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அவர்கள் தங்களின் உறவினர்களின் மூலம் அதனைத் துப்புரவு செய்யுமாறும் அல்லது அக் காணிகள் அரச உடைமையாக்கப்பட்டு அரச செலவில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 commentaires:

கருத்துரையிடுக