திங்கள், 30 ஆகஸ்ட், 2010

யாழில் இரவு நேரப் பேருந்துகளில் இளசுகளின் தொல்லை தாங்கமுடியவில்லை

யாழ்ப்பாணம்,ஓக.30
யாழ்ப்பாணத்தில் இரவு நேரங்களில் தனியார் சிற்றூர்திகளில்  மற்றும் பேருந்துகளில் இளைஞர்களின் சேஷ்டைகள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் சமீப காலமாகச் சுமுகமான சூழ்நிலை நிலவுவதால் பயணிக
ளின் நலன் கருதி யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து தூர இடங்களுக்குச் செல்லும் இறுதி  நேர தனியார் சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகள் புறப்படுவது இரவுவரை நீடிக்கப்பட்டுள்ளது.



இதனால் வேலைக்குச் சென்று திரும்புவோர், மாலைநேர வகுப்புக்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், வைத்திய சாலைக்குச் சென்று திரும்புவோர் எனப் பலதரப்பட்டோர் இந்த இரவுநேர பஸ் சேவையால் பயனடைவது  குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த இரவுநேர பஸ்களில் மதுபானம் அருந்தி விட்டுவரும் சில இளைஞர்கள் பஸ்களில் பயணிக்கும் இளம் பெண்களுடன் தகாத முறையில்  நடந்துகொள்ள முனைவதாகவும் பயணி கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவை கூடுதலாகத் தனியார் சிற்றூர்திகளிலேயே நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படு கின்றது.
இதனை ஒரு சில நடத்துநர்கள் கண்டித்தாலும், பல நடத்துநர்கள் கண்டும் காணாதது போல் செயற்படுவதாகவும், பொதுமக்களால் மேலும் தெரிவிக்கப்படு கின்றது.                            

0 commentaires:

கருத்துரையிடுக