திங்கள், 4 அக்டோபர், 2010

அல்லையூர் இணையத்திற்கு மனந்திறந்து வந்த மடல் ஒன்று!


அல்லையூர் இணையத்திற்கு!  எனது அன்பு கனிந்த நன்றிகள், வாழ்த்துக்கள்! உரித்தாகுக! அல்லையூர் இணையத்தளம் எமது கிராம மக்களின் உறவுப்பாலமாக எமது ஊரை நினைத்துப் பார்க்கவைக்கும், கடமையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கின்றது. இதற்காக இந்த இணையத்தை பாராட்ட விரும்புகின்றேன்.

மக்களுக்கு நன்மை பயக்கும் நோக்கத்தோடு, உதவிக்கரம் நீட்டும் இந்த சேவை சிறப்பாக முன்னோக்கி செல்கிறது என்பது அல்லையூர் இணையத்தைப் பார்க்கும் போது தெரிகிறது.


1. புலம் பெயர்ந்த மக்கள் இழந்த உறவுகளைக் காணவும், அவர்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. இந்த இணையம்.
2. தொலைவில் இருந்தாலும் எமது மக்கள் துயரில் பங்கு கொள்ள, உதவி செய்ய, முன்னேற்ற வழி வகுத்துத் தருகிறது. இந்த இணையம்.
3. கனடாவில் உள்ள எனது நண்பர் சகாயராஜாவைப் பார்தேன். எனதும் எனது ஜயாவின் கூட்டாளியாகிய ஸ்ரனிஸ்லாஸ் அவர்களைப் பார்த்தேன். பழைய நினைவுகள் மலர்கின்றன, அல்லைப்பிட்டியில் பராசக்தி வித்தியாசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியராக என் மருமகள் சிலுவைராஜா வசந்தி அவர்களைப் பார்த்து மகிழ்ந்தேன். இது யாரு செய்த பாக்கியம். இந்த இணையம் தான்.
4. எனவே! இப்படிப் பல செய்திகளை, அறிவித்தல்களை, தந்து கொண்டிருக்கும் அல்லையூர் இணையத்திற்கு எனது பாராட்டுக்கள்!
அல்லையூர் இணையத்திற்கு! எனது அன்பு கனிந்த நன்றிகள், வாழ்த்துக்கள்! உரித்தாகுக! அல்லையூர் என்ற இணையத்தளம் எமது கிராம மக்களின் உறவுப்பாலமாக எமது நாட்டை நினைத்துப் பார்க்கவைக்கும், கடமையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கின்றது. இதற்காக இந்த இணையத்தை பாராட்ட விரும்புகின்றேன்.


நாம் இனி பார்வையாளராக இருக்கமுடியாது. பங்காளிகளாக, எமது கிராம மக்களை, நாம் பிறந்த மண்ணை நேசிப்பவர்களாக இருக்கவேண்டும். சிறு துளியானாலும் உதவி செய்யவேண்டும் என்ற அவா எங்களுக்கு இருக்கவேண்டும். தனித்தோ, கூட்டாகவோ உதவ முன் வாருங்கள் என எமது மக்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

நாம் சிறிய உதவி என்றாலும், எல்லோரும் ஒன்று சேர்ந்து உதவும் போது, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல்,  உதவி செய்யும் வல்லமை எமக்கு வந்து விடும். எமது கிராமத்தில் வாழும் மக்களை துன்பங்களில் இருந்து மீட்க, அவர்களை அன்பு வழியில் நடத்திச் செல்ல உதவியாக இருக்கும். எனவே! எமது கிராமம், எமது மக்கள், எமது நாடு என்ற பாதையில். துன்பப்படும் எமது மக்களை காப்பாற்ற அல்லைப்பிட்டி மக்களாகிய நாங்கள் இதயத்தைத் திறந்து, வரும் நல்ல நாட்களில், நத்தார், புதுவருடம், தைப்பொங்கல், சித்திரை வருடம், உங்கள் பிறந்தநாள் போன்ற நாட்களில் ஒரு அன்பளிப்பை, உங்கள் பிறந்த மண்ணுக்காக, அதில் வாழும் உங்கள் உறவுகளுக்காக உதவுங்கள், உன்னைப்போல் பிறரை நேசி என்ற அன்பான வார்த்தைக்கு இணங்க இறைவனின் ஆசியை பெற்று நின்மதி அடைய, எமது கிராமத்து மக்களை, எமது நாட்டு மக்களை மறவாதீர்கள், காரணம் அவர்கள் துயரோடு, துவண்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதை மனதில் நிறுத்தி எமது உறவுகளைக்காப்போம் வாருங்கள்!
நன்றி அன்புடன் .அருள் தெய்வேந்திரம்-சுவஸ்

2 commentaires: