செவ்வாய், 5 அக்டோபர், 2010

தாலாட்டும் ஊர் ஞாபகங்கள்

                                            அல்லையூர்-த.தவபாலன்
ஒற்றைப் பனைமர நிழலும்-ஈச்சம்

பற்றைக் காடுகள் பலவும்
பழகித் திரிந்த தோழர் பலபேர்-நினைவும்
பறித்துத் தின்ற மாங்காய்ப் பிஞ்சும்
அம்மா காச்சிய ஒடியல் கூழும்
நினைவை நிறைக்கிறதே!
நெஞ்சைத் துக்கம் அடைக்கிறதே!

படித்து வந்த பள்ளிக் கூடம்
நடித்து மகிழ்ந்த நாடகக் கலைகள்-
குடித்துக் களித்த இளநீர்-நொங்கு
திகட்ட-திகட்ட நெஞ்சம் நினைக்கும்.
நினைக்க- நினைக்க இதயம் மகிழும்

நட்டநடு வீதியில் கிட்டிப்புல்லடித்து
சுடு மணலில் கிளித்தட்டு மறித்து-
வெற்றுக் காலுடன் உதைபந்தடித்து
ஊருக்குள் விளையாடிய பொழுதுகளெல்லாம்
கனவினில் வருகிறதே! கண்ணீர் தான் சொரிகிறதே!

புசிக்காத வயிறு பசியினில் கொதிக்க-
கடந்து போகுமிதுவுமென்று
அசைக்க முடியாத தன்னம்பிக்கை மனதிலிருக்க
எதிர்த் தோடினோம் இடர்கள் பொடிபட
இன்னமும் ஓடுவோம்-கனவுகள் மெய்ப்பட......

0 commentaires:

கருத்துரையிடுக