சனி, 3 ஜூலை, 2010

வேலணை பெருங்குளம் முத்துமாரி

தாயாரின் பக்தர்களின் பெரும் முயற்சியால் நாட்டில் பலதரபட்ட நெருக்கடி காலங்களிலும்,  வேதனையில் குளித்த போதிலும  தாயாரின்மேல் உருவான பெரும்பக்திகொண்ட மனநிலையில் நீண்டகாலமாக தேங்கிக் கிடந்த அன்னையின் இராஜகோபுர பணியை தெய்வீக பொலிவுடன் அமைத்து 02.07.2010 அன்று கும்பாபிஷேகக் குடமுழுக்கு விழாவை நடத்தி தொடர்ந்து 42 நாட்கள் மண்டலாஷேகம் நடத்தி எதிர்வரும் 19.08.2010 தொடக்கம் 12 நாள் வருடாந்த உற்சவத்தையும்.  நடத்த நிர்வாகத்தனர் திட்டமிட்டு வருகின்றார்கள்.




கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன்  சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது.


0 commentaires:

கருத்துரையிடுக