புதன், 14 ஜூலை, 2010

வறுமையோடு போராடி வாழ்க்கையில் ஜெயித்த நம்மூர் இளைஞனின் கதை!!!

                                                    இது கதையல்ல நிஜம்
                                                   *************************

இவர் அல்லைப்பிட்டிமண்ணுக்கு பெருமைசேர்த்தவர்களின் வரிசையில்
அடங்குவதால் இவரைப்பற்றிய தகவல்களை
உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
இவர் அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தில் 23/05/1959,இல்பிறந்த திரு சிவப்பிரகாசம்
பரிமளகாந்தன் அவர்கள் ஆவார் இவர் எங்கள்
மண்ணின் மைந்தர்களில் ஒரு செல்வ செழிப்பில்லாத குடும்பத்தில் பிறந்தாலும் வாழ்க்கையில் வறுமையோடு போராடி வாழ்வின் உயர்ந்தநிலைக்கு வந்தவர் ஆவார்.


இவர் தன் ஆரம்பக்கல்வியை அல்லை/பராசக்தி
வித்தியாலயத்திலும் உயர்கல்வியை வேலணை சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி
மத்திய மகா வித்தியாலயத்திலும் அதன்பின்
தன்கல்வியை மட்டுமே மூலதனமாக வைத்து
தொழில் தேடத்தொடங்கினார். ஆரம்பகட்டமாக சீமேந்து ஆலையில் இயங்கிய
ஊரணி புனித அந்தோனியார் தொழிற்சம்மேளனத்தில் பொருள்காப்பாளராக
(store keeper)சில ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பிற்பட்டகாலப்பகுதியில்
(எண்பதுகளில்)அல்லைப்பிட்டிக் கிராமத்தில் உருவாகிய(விமல் அலுமினியம்
தொழிற்சாலையில்)சில ஆண்டுகள் பணியாற்றினார்.நாட்டில் தோன்றிய
அசாதாரணசூழ்நிலைகாரணமாக தொழிற்சாலை மூடப்பட இவரோடுசேர்ந்து
பல அல்லை இளைஞர்களும் வேலையிழக்க நேரிட்டது.
அதன்பின் தன்கடும்முயற்சியால் யாழ்/புனித சம்பத்திரிசியார்(st patrik's college)கல்லூரியில் கணக்காளராக(Account clerk)பணியில் சேர்ந்து சில ஆண்டுகள்
பணியாற்றினார்.
அரசாங்கப்பணியில் இவருக்கு இருந்ந ஆர்வம் இவரை அஞ்சல்துறையில்
பணிபுரியவைத்தது. இருப்பினும் அஞ்சல் திணைக்களத்தில் ஒரு சாதாரண
அஞ்சல் ஊழியராகவே(post man)தனது பணியை ஆரம்பித்த இவர் பின்னா்
படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்று இன்று ஒரு அஞ்சல்தரப்பிரிவு உத்தியோகத்தராக(m-s-o)கடமையாற்றுகின்றார்.
அது மாத்திரமன்றி ஒரு கலைஞனாகவும் இவர்
எமது மக்களால் அறியப்பட்டவர்.
1970களில் அல்லைப்பிட்டியில் பிரபலமாயிருந்த வேல் இசைக்குழுவின்
பிரதானபாடகராகவும்-அல்லையூர் சித்திரகலா
நாடகமன்றத்தில் ஒருபிரதான நடிகராகவும்
தனது கலைப்பங்களிப்பை திறமையோடு
ஆற்றியிருந்தார்.
வாழ்வில் தோல்விகளை கண்டு துவழாதமனமும் விடாமுயற்சியும் இருந்தால்
உறுதியாக வெற்றிபெறலாம் என்பதற்கு இவர்
ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றார்.
எமது அன்புக்கும் பெருமைக்கும் உரியஇவர்
கடந்த ஆண்டில் தனது 50ஆவது அகவையை
கொண்டாடினார்.
மிகவிரைவில் தனது அஞ்சல் பணியின் வெள்ளிவிழாவை கொண்டாட இருக்கும் இவரை அல்லைப்பிட்டி மக்கள் சார்பாகவும் எமது இணையத்தளம்
சார்பாகவும் இவரை நாம் உளமார வாழ்த்துகின்றோம்.

3 commentaires:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. நண்பா!!! கேட்கும் போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கின்றது தெரியுமா? ஓன்றாக படித்தோம் பராசக்திவித்தியாசாலையில்ஃவேலணை மத்தியமகாவித்தியாலயத்தில் வறுமையில் வாடிய அந்த பாடசாலை மதியநேர இடைவேளைநாட்களை மறக்கமுடியுமா? ஏவ்வளவு துணிவோடு நிமிர்ந்தநடைபோட்டு சமாளித்தாய் என்னால் முடியாதபோது கூட உன் சிரிப்பினால் எனைவென்றாய்இ காலத்தை வெல்ல நாம் இருவரும் வெற்றிநடைபோட்டோம் அல்லைசிவாவின் அருபொரும் பணியால் கண்டுகொண்டேன் என் நண்பனின் புன்சிரிப்பை “அவன் காலத்தை வென்ற கதாநாயகன்”.. பராசக்தி வித்தியாசாலையில் நம் இருவரின் கதைகள் அழிக்கமுடியாததொன்று. நண்பா!! நானும ;நலமே! முன்னர் அனுபவித்த கஸ்டங்களுக்கு பலாபலனாக இங்கு கூட ஒரு தொழில்நிலயத்தின் சொந்தக்காரனாகவும் பல நண்பர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு ஏணியாகவும் நானும் அவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்னுடைய வெளிநாட்டு வாழ்கையில் இந்த ஆண்டு இத்தாலி nஐனோவா மாநகரின் தழிழு; பிரதிநிதியாக தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டு எமது மண்ணுக்கும் எம் மானிலத்து மக்களுக்குமாக சேவைசெய்கின்றேன். “முயற்ச்சியுடையார் இகழ்ச்சியடையார்” நன்றி அல்லையுர் மக்கள் பணி.
    அல்லையுர் அருள் ஆனந்த் (மெற்றியுஸ் ஆனந்தராஐன்)
    தொடர்புகளுக்கு: நஅயடை; அநவாநரள61@நரம.வை

    பதிலளிநீக்கு