புதன், 23 ஜூன், 2010

வணக்கம் ஏன் இந்த இணையத்தளம்?


































 உங்கள் விளம்பரங்கள்
அனைத்தையும் இலவசமாக இப்பகுதியில் பதிவுசெய்கினே்றோம் நீங்கள்தேடும்
எம் ஊர் மக்களுடனான தொடர்பினை
ஒரு சில நிமிடங்களில் ஏற்படுத்தித்தருகின்றோம் 
அனைத்துதொடர்புகளுக்கும் allaipiddy@gmail.com                                      



































                                                                  செய்திகள் 
            
                                                                 ******************            

                                     அல்லைப்பிட்டி குடியேற்ற திட்டம்          


அல்லைப்பிட்டி அந்தோனியார் கோவிலை மையமாக வைத்து ஆயிரம்
வீட்டுகுடியேற்றத்திட்டம் கத்தோலிக்க திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நுாற்றுக்கணக்கான வீடுகள் கட்டி
முடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து வீடுகள் கட்டும் வேலை
நடைபெற்றுவருகிறது.
                                                           வீதி திறப்பு
                                                        
                                                          ---------------

அல்லைப்பிட்டியையும் மண்டைதீவையும் இணைக்கும் உள் வீதியை மக்கள்
பயன்படுத்த. படையினர் அனுமதிவழங்கியுள்ளனர். 20வருடங்களுக்கு மேலாக
பயன்படுத்தாத இவ்வீதி தற்போது பழுதடைந்து காணப்படுவதாகவும் வாகன
போக்குவரத்துக்கு ஏற்றதாக இவ்வீதி இல்லையென்று இப்பகுதி மக்கள்  
தெரிவிக்கின்றார்கள்
.

                                  அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் தெரிவிப்பு
                                  *************************************************
அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் திரு சின்னதுரை இரத்தினேஸ்வரன்(இரத்தினம்) அவர்களுடன் நாம் தொடர்பினை மேற்கொண்டபோது அல்லைப்பிட்டியில் தற்போது 400குடும்பங்கள் வரை மீள்குடியேறியுள்ளதாகவும். பாடசாலை 300க்கும் அதிகமான மாணவர்களுடன்
சிறப்பாக கல்வி போதிப்பதாகவும் அல்லைப்பிட்டி முழுவதற்கும் மின்சாரம்
வழங்கப்பட்டிருப்பதாகவும் அல்லைப்பிட்டி மக்களின் அடிப்படைவசதிகள்
யாவும் சீரமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்

.
உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் செல்ல அனுமதி
                         ***********************************************************
மண்டைதீவு பகுதியில் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலையத்துக்குள்
இருக்கும் பொதுமக்களின் வீடுகளையும் உடைமைகளையும் பார்வையிட.
கட்டம் கட்டமாக பொதுமக்களை படையினர் அழைத்துச்சென்றனர்



மண்டைதீவு சுவிஸ் ஒன்றியம் தையல்மிசின் அன்பளிப்பு
*****************************************************************************
மண்டைதீவு மக்களுக்கு மண்டைதீவு சுவிஸ் ஒன்றியம் தையல்மிசின்களை
அன்பளிப்பாய் வழங்கியுள்ளது.வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கே இவ்வுதவி கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் சிறுகைத்தொழிலை ஊக்கப்படுத்துமுகமாகவும் தெரிவுசெய்யப்பட்ட.
பலருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது


.அல்லைப்பிட்டி மண்கும்பான் மக்கள் கோரிக்கை
********************************************************************************
அல்லைப்பிட்டி மண்கும்பான் மக்கள் தங்கள் போக்குவரத்துக்கு உதவியாக அல்லை மண்கும்பான் ஊடாக போக்குவரத்து சேவையொன்றை வங்களாவடி வரை ஆரம்பிக்குமாறு
கோரிக்கை ஒன்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளனர்.

மரண அறிவித்தல
*************************


அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை சேர்ந்த திரு சிதம்பரப்பிள்ளை குழந்தைவேலு அவர்கள்30-05-2010 சனியன்று அல்லைப்பிட்டியில் காலமானார்












**************************************************************************


அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி மடுத்தீன் ஆரோக்கியம்
 அவர்கள் அல்லைப்பிட்டியில் காலமானார்.

************************************************************************************

அல்லைப்பிட்டி 2ம்வட்டாரத்தை சேர்ந்த திரு அந்தோனி இராசலிங்கம்
அவா்கள் 17/06/2010 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.
                                

அல்லை ஊர்(கவிதை)
**************************
அலைகள் வந்து தாலாட்டும் அல்லைஊராம்
ஆவினங்கள் பால் மழையாய்ப் பொழியும் ஊராம்
வெள்ளைமணற் பரப்பாகி விரிந்த ஊராம்
வேளாண்மை தனில் என்றும் உயர்ந்த ஊராம்
புள்ளி மயில் வேலவனும் துள்ளி ஆடி
புனித திருத்தலங்கள் அங்கு நிறைந்ந ஊராம்
மூன்றுமுடி அம்மனுடன் முருகனும் சேர்ந்து
முன்னின்று வரவேற்கும் சிறந்த ஊராம்
தேவாலயங்களுடன் தேன் சொரியும்
பூமரங்கள் மாமரங்கள் நிறைந்த ஊராம்
கடல் வளமும் கனிவளமும் கொண்ட ஊராம்
கல்விமான்கள் பலரையுமே ஈன்ற ஊராம்
தென்றல் வந்து தாலாட்டும் சிறிய ஊராம் 
தேசியத்தின் கற்பகதரு நிறைந்த ஊராம்
அல்லி ராணி அரசாண்ட அழகு ஊராம்
ஆனந்தமாய் புள்ளினங்கள் பாடும் ஊராம்
சின்னச் சின்னக் குருவிகளும் சிரித்துப் பேசி
சிங்காரமாய்ப் பறந்திருக்கும் அல்லை ஊராம்
கிளிகள் வந்து பழங்கள் உண்டு கிசுகிசுக்குமே
குயில்கள் அங்கு போட்டி போட்டுப் பாட்டிசைக்குமே
பன்னிரண்டு மாதங்களும் பயிர் செழிக்குமே
மண்ணின் வளம் அனைவரையும் மயங்க வைக்குமே
நெற்பயிர்கள் விளைந்து அங்கு நெஞ்சை ஈர்க்குமே
நேசம் நிறை மக்கள் அன்பு மனிதம் காட்டுமே
கவிஞர்களை ஈன்ற அந்த அல்லை ஊரிலே
காவலுக்கு வைரவரும் ஐயனாருமே
கைகோர்த்து நின்று அங்கு கருணை காட்டவே
மெல்லியதாய் இசைவழங்கி கடலின் அலைகள்தான்
மெதுவாக இசைபாடி இன்பம் ஊட்டுமே
இத்தனையும் நிறைந்த அந்த இனிய ஊரையே
இனி எழுத எனக்கு இங்கு அறிவு போதாது

திருமதி: அம்பிகா இராஜலிங்கம்         
சுவிஸ் (அல்லை).

0 commentaires:

கருத்துரையிடுக