செவ்வாய், 29 ஜூன், 2010

      

பிரேசில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் தற்கொலை
 7/4/2010 9:02:34 PM -உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் கால்பந்து இமயம் பிரேசில் சரிந்த சோகத்தில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஹெய்தி நாட்டை சேர்ந்த 18 வயதான இவர், பிரேசில் வெளியேறிய விரக்தியில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட இவர், ஓடும் கார் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பயிற்சியாளர் துங்காவின் தவறான தேர்வு முறை, தற்காப்பு பகுதியின் பலவீனம், தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கையாளாதது போன்றவை பிரேசில் அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

இத்தொடர் ஆரம்பமாகும் முன் பிரேசில் அணி பயிற்சியாளர் துங்கா சில தவறான முடிவுகளை கையாண்டார். அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த ரெனால்டினோ, அட்ரியானோ, டியாகோ, அலெக்சாண்ட்ரோ பாடோ, மார்சிலோ போன்ற வீரர்களை தேர்வு செய்ய மறுத்தார்.

சூழ்நிலைக்கு ஏற்ப ஆடும் ஆற்றல் படைத்த இவர்களை நீக்கியது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. குறைந்தபட்சம் ரொனால்டினோவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஒழுக்கம் தான் முக்கியம் என்று கூறி, அவரை சேர்க்க மறுத்தார். விளைவு? தோல்விதான்.

முன்னணி வீரர்கள் இல்லாத பிரேசில் அணி, நெதர்லாந்தை சமாளிக்க முடியவில்லை.கடந்த 2002இல் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணி, 2006இல் காலிறுதியுடன் நடையை கட்டியது. இம்முறையும் காலிறுதியுடன் வெளியேறியுள்ளது. இனி 2014இல் பிரேசிலில் நடைபெற உள்ள 20ஆவது உலக கிண்ண தொடரில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

            மண்டைதீவு கண்ணகி அம்மன் பொங்கல்
          ************************************************************************************
20வருடங்களுக்கு மேலாக அதியுயர் பாதுகாப்புவலயத்திற்குள் இருந்த
புகழ்பெற்ற மண்டைதீவு  கண்ணகி அம்மன் பொங்கல்விழா திங்கள் அன்று வெகு சிறப்பாக
நடைபெற்றது. மேலும் இவ்வாலயம் முற்றாக சேதமடைந்து உள்ளதால்
மீளவும் ஆலையத்தை புதுப்பிப்பதற்கு புலம்பெயர் மண்டைதீவு மக்களிடம்
கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

0 commentaires:

கருத்துரையிடுக