புதன், 23 ஜூன், 2010

அன்பான மக்களே!
இப்பகுதியில் அல்லைப்பிட்டி மண்கும்பாண் மண்டைதீவு ஆகியபகுதிகளில்
மரணித்த எம் ஊரவர்களின் நிழல்ப்படங்களை நிரந்தரமாக பதிவு செய்ய
இருப்பதால் இந்த இணையத்திற்கு உங்கள் உறவினர்கள் யாரேனும் மரணித்து
இருந்தால் முழுப்பெயர் தோற்றம் மறைந்த திகதியிட்டு ஒரு நிழல்ப்படத்தை
கீழ்காணும் மின் அஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்.
allaipiddy@gmail.com


மண்டைதீவு காவல் தெய்வம் கண்ணகியின்

 
மண்டைதீவு மக்களின் காவல் தெய்வம் கண்ணகியம்மனின்  
பொங்கல் விழாவினை தலைமை பூசகரின் முயற்சினால் மக்களின் பங்களிப்போடு நடாத்த முன்வந்துள்ளனர்.
மண்டைதீவு மக்களின் காவல் தெய்வம்  கண்ணகியம்மனின்   பொங்கல்விழாவினை
தலைமை பூசகரின் முயற்சினால் மக்களின் பங்களிப்போடு நடாத்த முன்வந்துள்ளதாக
மண்டைதீவு மக்கள் தெரிவிக்கும் போது அவர்கள் மனங்களில் வேதனை தளும்பி இருந்தது வேதனையை அளித்தது . வருடா  வருடமாக அம்மன்  ஊர் முழுவதும் ஊர்வலம் வந்து முத்தரசி சேர்த்து வந்து பொங்கல் செய்வது எமது வழக்கம் .
கடந்த இருபது வருடமாக அதி உயர பாதுகாப்பு  வளையம் என 
பூசை இன்றி விளக்கேத்தல் இன்றி தவிக்கவிட்ட அம்மனை   
தரிசிக்க  கடல் படையினர் பாதுகாப்பு வளையம் சிறிது தளர்த்தி
அவர்களின் அனுமதியுடன் சென்று வர அனுமதி வழங்குவதால்
ஊர்வலம் தவிர்ந்த பொங்கலினை 28 .06 .2010 திங்கள்கிழமை அன்று
 நடாத்த முடிவுசெய்துள்ளனர்,என அறியமுடிகின்றது.
அனைவரின் முயற்சிக்கும்  நன்றிகள் .
  
கடற்கரை ஓரத்திலே
காவல் தெய்வமென
கற்பகமாய் வீற்றிருக்கும்
கற்புக்கரசியே கண்ணகியே
உன்பாதம் தொழுதோமம்மா
எந்நாளும் காத்தருள்வாய்
ஆனிப் பறுவத்து
முதல் வெள்ளியில்
முத்தரிசித் தண்டளுடன்
ஊர் எல்லை எங்கும்
ஊர்வலமாய்ச் சென்று
உன் பக்தர்களைக் காப்பவளே
பொங்கல் படையலுடன்
விடியும்வரை பூசைகளும்
அதிகாலையில் தீமிதிப்புடன்
தீவேட்டிப் பூசையுடன்
பக்தர்கள் ஒன்று கூடி
பொங்கல் திருநாளை
முறையாக முடித்துவைப்போம்
அகிலாண்டேஸ்வரியே தாயே
அம்பிகையே கண்ணகியே
ஆதரித்துக் காத்தருள்வாய்… 


0 commentaires:

கருத்துரையிடுக